தமிழ் சினிமாவில் அஷ்டவதானி என்று அழைக்கப்படுபவர் டி ராஜேந்தர். அவரது மூத்த மகன்தான் சிம்பு என்கிற சிலம்பரசன். தந்தையை போல மகனும் சினிமாவில் கலைத்துறையில் மிக மிக திறமையானவர்தான். நல்ல பாடகர், சிறந்த நடிகர், நடனக் கலைஞர், நல்ல இயக்குனர் என ஆற்றல் மிகுந்த ஒரு கலைஞனாக தான் இருந்து வருகிறார்.
ஆனால் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் போல, இவரும் படப்பிடிப்பில் சரிவர கலந்துக்கொள்ள மாட்டார். படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு, ஓட்டல் அறையிலேயே படுத்து தூங்கி விடுவார். பல நாட்களுக்கு தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்கு போய் விடுவார். கால்ஷீட் தந்துவிட்டு, இயக்குனர்களை தவிக்க விடுபவர் போன்ற குற்றச்சாட்டுகள் சிம்பு மீது இருந்து வருகிறது.
சினிமாவில் அதிக அக்கறை காட்டாமல் அவ்வப்போது சிலம்பரசன் இப்படி அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை அலைய விட்டு, பாடாய்படுத்தி விடுவதால் இவரை வைத்து படம் எடுக்கவும், படம் தயாரிக்கவும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அச்சப்படுவதாக கோலிவுட்டில் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடித்து வரும் சிலம்பரசன், நீண்ட நாட்கள் தொடர்ச்சியான கால்ஷீட் இந்த படத்துக்கு தந்துள்ளார். இதில் ஒரு நாள் கூட நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வந்துள்ளார். காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால் கூட ஷார்ப்பாக அந்த நேரத்தில் மணிரத்னம் முன்பு ஆஜராகி விடுகிறார்.
இப்படி மணிரத்னம் இயக்கும் படத்தில் சிலம்பரசன் சின்சியர் காட்டி அக்கறையாக நடிப்பது போல், மற்ற இயக்குனர்கள் படத்திலும் நடித்தால் அவர் லெவலே வேறு மாதிரியாக இருக்கும் என்று சினிமாத்துறையினர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தக்லைப் படத்தில் கமலும் நடிக்கிறார். மணிரத்னம், கமல் என்ற 2 பேர் மீதும் அபரிமிதமான அன்பும், மரியாதையும் கொண்டவராக சிம்பு இருப்பதால்தான் இப்படி நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார் என்கின்றனர்.
அதனால் இனிமேல் திமுக கட்சிக்காரர்கள் கருணாநிதி படத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அரசு அலுவலகங்களுக்கு சென்று உடனடியாக காரியம் சாதிப்பது போல், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிம்பு கால்ஷீட் வேண்டும் என்றால், மணிரத்னம் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு போனால், உடனே சிம்பு படத்தில் நடிக்க சம்மதித்து விடுவார். அந்தளவுக்கு மணிரத்னம், கமலுக்கு சிம்பு முக்கியத்துவம் தருகிறார் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.





