- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த சிம்ரன்... என்ன விஷயம்னு தெரியுமா...

திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த சிம்ரன்… என்ன விஷயம்னு தெரியுமா…

- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் மிக முன்னணியாக மற்றும் பிஸியான நடிகையாக இருந்தவர் சிம்ரன். நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

இங்கிருந்துதான் அவரது தமிழ் திரையுலக பயணம் ஆரம்பமானது. தொடர்ந்து நட்புக்காக உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம். சொல்லப்போனால் அவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த காவியம் அதுதான் என்று அடித்துக் கூறலாம்.

இதைத்தொடர்ந்து, பல்வேறு வெற்றி திரைப்படங்களை சிம்ரன் கொடுத்து வந்தார். தமிழ் சினிமாவின் கனவு நாயகி அந்தஸ்தையும் அவர் பெற்றார். கமல்ஹாசன் விஜய் அஜித் சூர்யா என பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சிம்ரன், திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தை விட்டுவிட்டார்.

இப்படியான சூழலில்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் திரை உலகில் மீண்டும் அவர் என்ட்ரி கொடுத்தார். சிவகார்த்திகேயன் நடித்த சீம ராஜா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன். ஆனால் அது அவருக்கு பெரிய ஒரு கம் பேக்காக அமையவில்லை. இதை எடுத்து படத்தேர்வில் பொறுமையைக் காட்டி வந்தார் சிம்ரன்.

இப்படியான சூழலில்தான் கடந்த மே மாதம் அவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்த அந்த திரைப்படத்தில், சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். அவரது மனைவியாக வந்தார் சிம்ரன். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வசூல் சாதனை புரிந்தது. இப்படியான சூழலில் தற்போது, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார் சிம்ரன்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்துடன் சிம்ரன் இணைந்து நடித்த பேட்ட திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ரஜினியுடனான சந்திப்பு குறித்து பதிவிட்டு இருக்கும் சிம்ரன், ரஜினிகாந்த் உடன் ஒரு அழகிய தருணத்தை செலவிட்டேன். கூலி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படங்களின் வெற்றி இதனை மேலும் சிறப்பாக்கியது என்று கூறி இருக்கிறார்.

சற்று முன்