தமிழ் சினிமா கருப்பு வெள்ளையாக இருந்த 1972ம் ஆண்டில் வெளியான படம் காசேதான் கடவுளடா. இப்போதும் அந்த படம் டிவி சானல்களில் அடிக்கடி போடப்படுகிறது. அதற்கு காரணம் அந்த படத்தின் காமெடி காட்சிகள்தான். குறிப்பாக போலி சாமியாராக அந்த படத்தில் வரும் டீக்கடை அப்பாசாமியான தேங்காய் சீனிவாசனின் நடிப்பு மிக பிரமாதமாக இருக்கும்.
அவர் பேசும் மங்களம் மங்களம் என்ற வசனங்களும் அவரது சாமியார் கெட்டப்பும் அந்த படத்தை ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்தது. இதனால் படத்தின் நாயகன் முத்துராமன் என்றாலும் நடிகர் தேங்காய் சீனிவாசனுக்கு தான் தியேட்டர் முன்பு மிகப்பெரிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
எனவே படத்தில் வரும் கேரக்டரை விட நடிப்புதான் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பேசுகிறது. எனவே படத்தில் நாயகன் வில்லன் காமெடியன் என்கிற கேரக்டரை விட அந்த கேரக்டரில் எந்தளவுக்கு அவர் நடிப்பில் ரசிகர்களின் மனம் தொடுகிறார்கள் என்பதே மிக முக்கியம். அந்த வகையில் இப்போது இன்று வெளியான பராசக்தி படத்தில் ரவிமோகன்தான் நடிப்பில் முன்னிலை பெற்றுள்ளார்.
இன்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த பராசக்தி படம் ரிலீஸாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழி கனிஷாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது பாடகி கெனிஷா கூறியதாவது, ரவிக்காக மட்டும்தான் பராசக்தி படம் ஓடும். என் கண்ணுக்கு ரவியை தவிர வேறு யாருமே தெரியலே. அவருக்காகவே இந்த படம் எடுக்கப்பட்டது போல் இருக்கிறது. அவர் ஹீரோவாக நடித்தால் என்ன வில்லனாக நடித்தால் என்ன இந்த படத்தில் நம்பர் ஒன் அவர்தான். 2ம் பாதியில் அவரை தவிர படமே இல்லை. ரவி எப்போதுமே எவர்கிரீன். எப்போதுமே எவர் பெஸ்ட் என்று கூறியிருக்கிறார்.
அடுத்து ஜனநாயகன் படம் ரிலீஸாகாதது குறித்து பேசிய கெனிஷா, விஜய் நடித்த ஜனநாயகன் படம் எப்போது வெளியாகிறதோ அன்று தான் உண்மையான பொங்கல் என்றும் கூறியிருக்கிறார். கெனிஷா பேசிய இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்றால் பராசக்தி படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லையா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





