- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் ரவியும் அப்படி இருப்பது பெரிய விஷயமில்லை… இதை ஏன் பெரிதாக பேசுகிறார்கள்? - பாடகி...

நானும் ரவியும் அப்படி இருப்பது பெரிய விஷயமில்லை… இதை ஏன் பெரிதாக பேசுகிறார்கள்? – பாடகி கெனிஷா போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர் நடிகர் ரவி மோகன். கடைசியாக அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. இப்போது பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். கராத்தே பாபு என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஜீனி என்ற அவரது படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

நடிகர் யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி இயக்குனராகவும் மாற உள்ள நடிகர் ரவி மோகன், தனது சொந்த நிறுவனம் தயாரிப்பில் அவரே நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை முக்கிய கேரக்டரில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

தனது மனைவி ஆர்த்தியை பிரிந்த நடிகர் ரவி மோகன், கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் தனக்கு ஜீவனாம்சமாக ரூ. 40 லட்சம் ஆர்த்தி கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாடகி கெனிஷா என்பவருடன் நடிகர் ரவி மோகன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமண அறிவிப்பு வெளியாகவும் அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பாடகி கெனிஷா வெளியிட்ட பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். எனக்கு பல ஆண்டுகளாக ஐசரி கணேஷ் சாரை தெரியும். அதனால் தான் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

- Advertisement -

அப்போது என்னுடன் ரவி மோகனும் வந்திருந்தார். நாங்கள் இருவரும் ஒரே வண்ணத்தில் உடையணிந்தது தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. ஆனால் நண்பர்கள் ஒரே வண்ணத்தில் உடை அணிவது பெரிய விஷயம் இல்லை. அது ஏன் பெரிதாக பேசப்படுகிறது என்று தெரியவில்லை.

இதை ஒரு காரணமாக வைத்து சிலர் ஐசரி கணேஷ் சாரை திட்டி இருந்தனர். இதனால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்று பாடகி கெனிஷா அந்த பதிவில் கூறி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்