நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்திருக்கிறார். இவர்களது விவாகரத்து வழக்கு இப்போது சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் சமீபத்தில் மாதந்தோறும் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ரவி மோகனின் மனைவி ஆர்த்தி மனுதாக்கல் செய்திருக்கிறார். வருகிற ஜூன் 12ம் தேதிக்குள் இதுகுறித்து வரும் ஜூன் 12ம் தேதிக்குள் பதிலளிக்க நடிகர் ரவி மோகனுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரவிமோகனின் நெருங்கிய தோழியும் பாடகியுமான ஹீலர் கெனிஷா வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். நடந்ததற்கு எல்லாம் நான்தான் காரணம் என உறுதியாக இருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு வர வையுங்கள். எனக்கு எதிராக வெறுப்பை மட்டுமே நீங்கள் மீடியாவில் பரப்பினால் தயவு செய்து அதை நிறுத்துங்கள்.
நான் ரொம்ப நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். உண்மை என்னவாக இருக்கும் என்பதை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு கொடுக்கும் கமெண்ட்டுகள் சாபம் கொலை மிரட்டல் போன்ற விஷயங்களால் என்ன நிலையில் நான் இருக்கிறேன் என்று யாராவது யோசித்தீர்களா? கர்மா பற்றி பேசி என்னை குறை சொல்கிறீர்கள். ஆனால் உண்மை வெளியில் வரும்போது உங்களுக்கு எல்லாம் என்ன நடக்கும் என நான் பார்க்க விரும்பவில்லை. நான் எனது கமெண்ட் செக்சனை ஆப் செய்யப் போவதும் கிடையாது.
மேலும் நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன். யார் பின்னாலும் நான் சென்று ஒளிந்து கொள்ளவும் போவதில்லை. நான் இங்கேதான் இருக்கப் போகிறேன்.
நீங்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நான் நீதிமன்றத்திற்கு வர தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் சொல்லட்டும் என் மீது தவறு என்று. உங்களுக்கு தைரியம் இருந்தால் என் முகத்தைப் பார்த்து என் மீதான விமர்சனத்தை முன்வையுங்கள். நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் அதற்கு முன்பு எனது தரப்பில் சொல்வதையும் கேட்டுவிட்டு விமர்சியுங்கள். அதை விட்டுவிட்டு உருவக் கேலி செய்வது, பொய்களை பரப்புவது, அவதூறுகள் பரப்புவது, கொலை மிரட்டல் விடுவது போன்றவற்றை தவிருங்கள். நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். என்னை கர்மா தண்டிக்கும் என்று கூறுகிறார்கள்.
உண்மை ஒருநாள் அனைவருக்கும் தெரியவரும். உண்மைதான் நிகரில்லாதது. என் மீது வைக்கப்படும் வசைச் சொற்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை நான் கடவுளிடம் கொடுத்து விடுகிறேன். கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என்று பாடகி கெனிஷா அந்த பதிவில் கூறியிருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் நான் கடவுளிடம் சரண் அடைவதாகவும் அவர் வெளிப்படையாக அதில் கூறியிருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





