இசை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட திரைப்பட பின்னணி பாடகி எஸ் ஜானகி நேற்றிரவு காலமானார். இந்தியாவின் நைட்டிங்கேல் என வர்ணிக்கப்பட்ட அவர் 88 வயதான நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு மைசூரில் நேற்று காலமானார்.
கடந்த சில தினங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவரது உயிர் பிரிந்தது. ஆந்திரம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் ரிபேலே பகுதியில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிறந்தார். எஸ் ஜானகி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி சமஸ்கிருதம் ஒடியா துளு பஞ்சாபி வங்காளம் கொங்காணி உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் அவர் பாடிய பாடல்கள் ஏராளமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. எஸ்பி பாலசுப்ரமணியம் கே ஜே ஜேசுதாஸ் மனோ மலேசியா வாசுதேவன் போன்ற பாடகர்களுடன் அவர் பல ஆயிரக்கணக்கான பாடல்களை தமிழில் பாடியிருக்கிறார். அவர் மட்டுமே பாடிய பல நூற்றுக்கணக்கான தனி பாடல்களும் வரவேற்பை பெற்றவை.
குறிப்பாக எஸ் ஜானகி பாடிய சிங்கார வேலனே தேவா என்ற பாடல் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ஒரு பாடலாக இருந்தது. தேவர் மகன் படத்துக்காக இஞ்சி இடுப்பழகா பாடலை கமலுடன் இணைந்து பாடியிருந்தார். அதே போல் மன்னன் படத்தில் அடிக்குது குளிரு என்ற பாடலை ரஜினியுடன் இணைந்து பாடியதும் எஸ் ஜானகிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கடந்த 1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற படத்தில் பாடகியாக அவர் அறிமுகமானார். பத்மபூஷன் நான்கு முறை தேசிய விருது பல்வேறு மாநிலங்களின் விருது என ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். இனிமையான தனது குரலால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ். ஜானகி.
இந்திய இசைத்துறையில் அவர் நிகழ்த்திய பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது மறைவு நிச்சயம் இசைத்துறைக்கு ஒரு பேரிழப்பு தான். தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாரதிராஜா பாக்யராஜ் என அடுத்தடுத்து காலமாகினர். நேற்று முன்தினம் ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார். இப்போது கானக்குயில் எஸ் ஜானகி மறைவுயும் ரசிகர்களின் இதயத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.





