தமிழ் சினிமாவில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை அவர் பாடியிருக்கிறார். அவர் பாடகர் நடிகர் மட்டுமல்ல, மிகச்சிறந்த பின்னணி குரல் டப்பிங் கலைஞர். குறிப்பாக கமல் நடித்த தெலுங்கு படங்களுக்கு எல்லாம் டப்பிங் பேசியவர் எஸ்பிபி தான்.
மேலும் பல படங்களில் எஸ்பி பாலசுப்ரமணியம் நடித்திருக்கிறார். குறிப்பாக கேளடி கண்மணி படத்தில் ராதிகாவுடன் எஸ்பிபி இணைந்து நடித்திருந்தார். சிகரம் படத்தில் அவரை இசையமைத்து பாடல்களை பாடியிருந்தார். காதலன் ரட்சகன் குணா பிரியமானவளே அவ்வை சண்முகி போன்ற படங்களிலும் எஸ்பிபி நடித்திருக்கிறார்.
ஒரு இன்னிசை கச்சேரியில் பங்கேற்ற பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது, நான் இதுவரைக்கும் 36 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறேன். இங்கே 3 மணி நேரத்தில் ஒரு 20 பாடல்களை நான் பாட முடியும். இதில் எந்த பாடல்களை நான் தேர்ந்தெடுப்பது? அது ரொம்பவும் கஷ்டம்தான்.
அந்த 20 பாடல்களில் உங்களுக்கு பிடிக்காத சில பாடல்களை நான் பாடலாம். அல்லது உங்களுக்கு பிடித்த பாடல்களை நான் போட முடியாமலும் போகலாம். எனினும் அடுத்த முறை உங்களுக்கு பிடித்தமான 20 பாடல்களை நான் பாட முடியும். நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்தை எல்லாம் நான் மறந்துடுவேனா? அப்படி நான் அவர்களை மறக்க முடியுமா? அது நடக்கிற விஷயமா?
நடிகர் கமல்ஹாசனுக்கு அவர் தெலுங்கில் நடித்த 150 படங்களுக்கு நான் டப்பிங் சொல்லியிருக்கிறேன். இப்போது கமல்ஹாசனே வந்து தெலுங்கில் பேசினாலும் யாரும் அதை நம்ப மாட்டார்கள். இது கமல்ஹாசனால் எனக்கு கிடைத்த பெருமை என்றே நான் நினைக்கிறேன்.
என்னுடைய முதல் கேப்டன் இசையமைப்பாளர்கள். என்னுடைய 2வது கேப்டன் பாடலை எழுதுற கவிஞர். என்னுடைய 3வது கேப்டன் ரசிகர்களாகிய நீங்கள்தான். அதனால் உங்களை சந்தோஷப்படுத்துவதே மட்டுமே எங்களுடைய குறிக்கோள் என்று அந்த நிகழ்ச்சியில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் பேசியிருக்கிறார்.





