- Advertisement -
Homeபொழுதுபோக்குஇங்கே நான்தான் விஐபி, எனக்கு மட்டும் கொண்டு வாங்க - முதல்வர் எம்ஜிஆர் ...

இங்கே நான்தான் விஐபி, எனக்கு மட்டும் கொண்டு வாங்க – முதல்வர் எம்ஜிஆர் போட்ட உத்தரவை மறுத்து பேசிய வில்லன் நடிகர் எம்என் நம்பியார்!

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரை சொன்னாலே ரசிகர்கள் பலருக்கும் உடனே வில்லன் நடிகர் எம்என் நம்பியார் முகம் நினைவுக்கு வந்து விடும். ரஜினிக்கு ஒரு ரகுவரன் போல கமலுக்கு ஒரு நாசர் போல விஜய்க்கு ஒரு பிரகாஷ் ராஜ் போல அன்றைய கருப்பு வெள்ளை சினிமாவில் எம்ஜிஆர் படங்களில் பிரதான வில்லன் என்றாலே எம்என் நம்பியார்தான்.

பெரும்பாலான எம்ஜிஆர் படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார் எம்என் நம்பியார். குறிப்பாக எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்ஜிஆர் நம்பியார் காம்பினேஷன் வேற லெவலில் இருக்கும். அதே போல் ஆயிரத்தில் ஒருவன் உரிமைக்குரல் படகோட்டி குடியிருந்த கோயில் என ஏராளமான படங்களில் வில்லனாக நம்பியார் நடித்திருந்தார்.

- Advertisement -

திரையில்தான் எம்என் நம்பியார் வில்லனே தவிர நிஜத்தில் மிகவும் சிறந்த மனிதர். நல்ல பண்பாளர். அதனால் எம்ஜிஆர் நம்பியார் இடையே நெருக்கமான நட்பும் அன்பும் இருந்தது. ஒருமுறை முதல்வராக இருந்த எம்ஜிஆரை காண எம்என் நம்பியார் வந்திருக்கிறார். முதல்வர் அறைக்கு வெளியே நம்பியார் காத்திருக்க அங்கே அமைச்சர்களும் இருந்துள்ளனர்.

அப்போது கதவை திறந்த எம்ஜிஆர் உள்ளே வாங்க என்று அழைத்திருக்கிறார். அங்கே இருந்த அமைச்சர்கள் உள்ளே செல்ல நம்பியார் அங்கேயே அமர்ந்துள்ளார். மீண்டும் கதவை திறந்த எட்டிப் பார்த்த எம்ஜிஆர், உங்களை தான் அழைத்தேன். உள்ளே வாங்க என்று நம்பியாரை தனது அறைக்குள் அழைத்திருக்கிறார்.

- Advertisement -

அங்கே அமைச்சர்களுடன் ஒருவராக நம்பியாரும் எம்ஜிஆர் அறையில் அமர்ந்திருக்கிறார். அப்போது எம்ஜிஆர் எல்லோருக்கும் காஃபி தருமாறு அங்கிருந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது நம்பியார் குறுக்கிட்டு எனக்கு மட்டும் ஒரே ஒரு காஃபி கொண்டு வாங்க என்று கூறியிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த அமைச்சர்கள், ஏன் நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களுக்கு காஃபி இல்லையா என்று கேட்க, இங்கே நான்தான் விஐபி. எனக்கு மட்டும்தான் காஃபி வழங்கப்பட வேண்டும் என்று வில்லன் பாணியில் கெத்தாக சொல்ல அங்கே இருந்த எம்ஜிஆர் உள்பட அனைவருமே சிரித்து விட்டனர். பிறகு நம்பியாரிடம் ஜாலியாக எம்ஜிஆர் பேசிக்கொண்டிருக்க முதல்வர் உத்தரவின்படி அனைவருக்கும் காபி தரப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்