- Advertisement -
Homeபொழுதுபோக்குதனக்கு மிரட்டல் விடுத்த சினிமா உதவி இயக்குனர் மீது பாடகர் எஸ்பிபி சரண் போலீசில் புகார்-...

தனக்கு மிரட்டல் விடுத்த சினிமா உதவி இயக்குனர் மீது பாடகர் எஸ்பிபி சரண் போலீசில் புகார்- உண்மையில் நடந்தது என்ன?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆயிரம் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல மொழிகளில் அவரது குரலில் பல ஆயிரக்கணக்கான பாடல்கள் உருவாகி இருக்கின்றன. இசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்று அவர் அன்போடு அழைக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்.

எஸ்பி பாலசுப்ரமணியம் பாடகராக மட்டுமின்றி ந;டிகராகவும் இருந்தார். கேளடி கண்மணி குணா ராட்சசன் காதலன் அவ்வை சண்முகி சிகரம் என பல படங்களில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். கமல்ஹாசன் நடித்த சில படங்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியவர் எஸ்பிபி தான். அதுமட்டுமின்றி சில படங்களை எஸ்பிபி சொந்தமாக தயாரித்திருக்கிறார். சில படங்களுக்கு அவரே இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இதில் மகன் எஸ்பிபி சரண். அவரும் ஒரு சிறந்த பாடகர். தமிழ் தெலுங்கு மொழிகளில் ஏராளமான பாடல்களை எஸ்பிபி சரண் பாடி இருக்கிறார். சரோஜா துரோகி உள்ளிட்ட சில படங்களில் எஸ்பிபி சரண் நடித்திருக்கிறார்.

மேலும் சென்னை 28 மழை ஆரண்ய காண்டம் உள்ளிட்ட படங்களையும் எஸ்பிபி சரண் சொந்தமாக தயாரித்திருக்கிறார். நடிகர் பாடகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவராக எஸ்பிபி சரண் இருக்கிறார். தற்போது எஸ் பி பி சரண் அவ்வப்போது டிவி சேனல்களில் ரியாலிடி இசை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றும் வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தனது வீட்டுக்கு வாடகை பணம் தராமல் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக உதவி இயக்குனர் ஒருவர் மீது பாடகர் எஸ் பி பி சரண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். தனக்கு சொந்தமான குடியிருப்பில் திரைப்பட உதவி இயக்குனர் திருஞானம் என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் திருஞானம் 23 மாதங்களாக வாடகை பணம் தராமல் இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து திருஞானத்திடம் எஸ்பிபி சரண் கேட்டுள்ளார். அப்போது பாடகர் எஸ்பி சரணை அவர் மிரட்டி இருக்கிறார். இதையடுத்து பாடகர் எஸ்பிபி சரண் உதவி இயக்குனர் திருஞாகனம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் ஆபாசமாக பேசி மிரட்டியதற்கு திருஞானம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் மனுவில் கூறியிருக்கிறார். பாடகர் எஸ் பி பி சரண் சினிமா உதவி இயக்குனர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்