தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து அவர் நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்கள் கடந்த ஆண்டு துவக்கத்தில் வெளியானது. அதன்பிறகு அவர் கடந்தாண்டில் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸில் கலந்துக்கொள்வதற்காக அஜீத்குமார் போய்விட்டார். இந்த ஆண்டிலும் கடந்த சில வாரங்களாக அவர் கார் ரேஸில் கலந்துக்கொண்டு வருகிறார். இன்னும் ஏகே 64 என்கிற அவரது அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகவில்லை. தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
நடிகர் அஜீத்குமாரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தவம் இருக்கிற நிலையில் அவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமின்றி உள்ளார். கார் ரேஸில்தான் அவரது முழு ஆர்வமும் இருக்கிறது. நடிகர் விஜயும் அரசியலுக்கு போய்விட்டதால் நடிகர் அஜீத்குமார் படங்கள் நடிக்க வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே குளிர்பானம் விளம்பரம் ஒன்றில் நடித்தும் நடிகர் அஜீத்குமார் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். குளிர்பானம் என்பது விஷத்தன்மை நிறைந்தது என்று பலரும் புகார் கூறி வரும் நிலையில் அவர் அந்த விளம்பரத்தில் நடித்தது பெரிய அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜீத்குமாரின் விளையாட்டு ஆர்வம் அவரது ரசிகர்களுக்கே அதிருப்தியை தந்திருக்கிறது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் ஆர்வம் குறித்து பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கூறியிருப்பதாவது, அஜீத்குமாருக்கு வயசான காலத்தில் இது எல்லாம் தேவையா? சினிமாவில் நடனமாட முடியவில்லை. சண்டைக் காட்சிகளில் சரியாக நடிக்க முடியவில்லை. இப்படி இருக்கும்போது உடல் வலிமை கொண்ட நபர்கள் பங்கேற்கும் கார் ரேஸில் அவர் ஏன் கலந்து கொள்ள வேண்டும்?
அஜீத்குமார் பேசும்போதே மூச்சு வாங்கிக் கொண்டு பேசுகிறார். அஜீத் போன்ற நபர் ஏன் அதிகப்படியான பணத்தை கொண்டு போய் கார் ரேஸில் கொட்ட வேண்டும்? அந்த பணத்தில் தமிழ்நாட்டில் ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யலாமே என்று பாடகி சுசித்ரா ஆவேசமாக கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து பலரிடம் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.





