- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்ரம் பிரபு நடித்த சிறை படத்துக்கு ரசிகர்களின் அதிகரிக்கும் வரவேற்பு… அதிகரிப்பட்ட திரைகள் - இதுவரை...

விக்ரம் பிரபு நடித்த சிறை படத்துக்கு ரசிகர்களின் அதிகரிக்கும் வரவேற்பு… அதிகரிப்பட்ட திரைகள் – இதுவரை வசூல் நிலவரம் என்ன?

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து அவரது இளைய மகன் பிரபுவை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வந்தவர் பேரன் விக்ரம் பிரபு. அவரது முதல் படம் கும்கி. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கி இருந்தார். லட்சுமி மேனன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தம்பி ராமையா ஜூனியர் பாலையா அஸ்வின் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தொடர்ந்து பல படங்களில் விக்ரம் பிரபு நடித்த நிலையில் சில படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றன. அவர் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்த்த பல படங்கள் சரியாக போகவில்லை. படங்கள் வௌியான நேரத்தில் ஏற்பட்ட சூழல்களும் அந்த படங்களுக்கு பெரிய வெற்றியை தராமல் போய்விட்டன என்பதும் கசப்பான உண்மை.

- Advertisement -

இந்நிலையில் டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு அறிமுக நடிகர் அக்‌ஷய் நடித்த படம்தான் சிறை. இந்த படம் கடந்த 25ம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டில் தமிழில் வெளியான சிறந்த படங்களில் சிறையும் ஒரு படமாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இந்த படத்திலும நடிகர் விக்ரம் பிரபு போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். கோர்ட்டுக்கு கைதியை அழைத்துச் செல்லும் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. மிகவும் யதார்த்தமான சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்து பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இது நடிகர் விக்ரம் பிரபுவுக்கு 25வது படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடித்த படங்களில் கும்கி படத்துக்கு பிறகு சிறை படம்தான் விக்ரம் பிரபுவுக்கு நல்ல அடையாளத்தை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதால் கணிசமாக தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் இந்த படம் வெளியான நிலையில் 3 நாட்களில் இதுவரை சிறை படம் ரூ. 4 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் இன்னும் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு வாரமாக இருப்பதால் ரசிகர்களின் கூட்டம் இன்னும் பலமடங்கு தியேட்டர்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்