- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் ஆச ராசாவே படப்பிடிப்பில் சிவாஜியை வீட்டுக்கு போக சொன்ன தயாரிப்பு நிர்வாகி, கோபத்தின் உச்சம்...

என் ஆச ராசாவே படப்பிடிப்பில் சிவாஜியை வீட்டுக்கு போக சொன்ன தயாரிப்பு நிர்வாகி, கோபத்தின் உச்சம் தொட்ட நடிகர் திலகம் – நடந்தது என்ன?

- Advertisement -

இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் என் ஆச ராசாவே. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தபோது சிவாஜிக்கு மாத்திரை சாப்பிடுகிற நேரம் வந்துவிட்டது. ஆனால் கஸ்தூரிராஜா சீக்கிரமாக படப்பிடிப்பை முடிக்கணும் என்று பரபரப்பாக வேலை பார்த்துகிட்டு இருந்துள்ளார். அப்போ தயாரிப்பு நிர்வாகி ஒருவர் சிவாஜியிடம் சென்று, நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. டைரக்டர் ஷூட்டிங் இன்றைக்கு முடிக்கணும்ன்னு சொல்கிறார் என்று கூறியிருக்கிறார். அதனால் கோபமான சிவாஜி, உன் வேலை என்ன? இயக்குநருக்கு தேவையானது கிடைச்சிருக்கான்னு பார்க்கிறது தானே? அதை மட்டும் செய். இயக்குனர் சொல்லாமல் நான் இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன் என்று ஸ்ட்ரிக்டாக சிவாஜி கணேசன் கூறியிருக்கிறார்.

சற்று முன்