- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா… ரஜினி கமல் பங்கேற்க வாய்ப்பு - அந்த பிரபல...

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா… ரஜினி கமல் பங்கேற்க வாய்ப்பு – அந்த பிரபல குடும்பத்தை கௌரவிக்க முடிவு, சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

அமரன் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பராசக்தி படம் ரிலீஸாக உள்ளது. முதலில் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்ட இந்த படம் இப்போது ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் அன்றே ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதனால் ஒரே நாளில் விஜய் சிவகார்த்திகேயன் படங்கள் மோத உள்ளன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள பராசக்தி படத்தை சுதா கொங்கரா டைரக்ட் செய்திருக்கிறார். ரவி மோகன் அதர்வா ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் மொழிப்போர் தியாகி ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்த வரை பராசக்தி என்றாலே நினைவுக்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். ஏனெனில் பராசக்தி படத்தில் நடித்துதான் அவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் கோர்ட்டில் அவர் பேசும் கோவில் பூசாரியை அடித்தேன் என்கிற அனல் பறக்கும் வசனம் இப்போதும் டிரண்டிங்கில் இருந்து வருகிறது.

பராசக்தி படத்துக்கு வசனங்களை எழுதியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. பராசக்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகுதான் தொடர்ந்து பல படங்களில் சிவாஜி கணேசன் நடித்தார். செவாலியே தாதா சாகிப் பால்கே போன்ற நாட்டின் மிக உயர்ந்த விருதுகளை சிறந்த நடிகர் என்ற முறையில் அவர் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனால் பராசக்தி என்ற டைட்டிலில் உருவான இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் திருச்சி அல்லது மதுரையில் பராசக்தி பட இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது.

இதற்கிடையே பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினரை அதாவது அவரது மகன்கள் ராம்குமார் பிரபு நடிகர் பிரபு பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை மேடையில் கௌரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் சிவாஜி குடும்பத்துக்கு நெருக்கமான சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்தமான ரஜினிகாந்த், கமல்ஹாசனை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்