- Advertisement -
Homeபொழுதுபோக்குஇறுதிக்கட்டத்தை நெருங்கும் எஸ்கே 23 திரைப்படம்... தூத்துக்குடியில் விறுவிறுப்பாக முடிந்த ஷூட்டிங்... அடுத்து எங்கே படப்பிடிப்பு...

இறுதிக்கட்டத்தை நெருங்கும் எஸ்கே 23 திரைப்படம்… தூத்துக்குடியில் விறுவிறுப்பாக முடிந்த ஷூட்டிங்… அடுத்து எங்கே படப்பிடிப்பு என்று தெரியுமா…

- Advertisement -

மாவீரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக அமரன் படத்தில் நடித்த முடித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் கமல்ஹாசன். கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக கட்டுமஸ்தான உடலுடன் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக, தீவிர உடற்பயிற்சியில் அவர் ஈடுபட்டார். மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக டீசரில் அவரது பெயர் மேஜர் முகுந்தன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

டீசரில் வெளியான காட்சிகளும் ரசிகர்களை கவரும் வகையிலேயே அமைந்தன. இருப்பினும் எத்தனை காலங்களுக்குத்தான் இன்னும் பாகிஸ்தான் தீவிரவாதிகளையே காட்டுவார்கள் என்ற பேச்சும் எழுந்தது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதற்காக அடர்ந்த தாடியுடன் அவர் காட்சி இருக்கிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு மனநலம் குன்றிய கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

 

அனிருத் இசையமைத்து வரும் இந்த திரைப்படத்தில், துப்பாக்கி பட வில்லன் நடிகர் வித்யூத் இருக்கிறார். இதுபோக, விக்ராந்த், மலையாள நடிகர் பிஜுமேனன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக முருகதாஸ் குழு தூத்துக்குடி சென்றது.

 

அங்கு திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பை எடுத்தார்கள். இது நடுவே அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, சிவகார்த்திகேயன் சென்று வழிபட்டார். இந்நிலையில் தூத்துக்குடி படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பி இருக்கிறது. அடுத்த 20 நாட்களுக்கு தாம்பரத்தில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட முருகதாஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

சற்று முன்