- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது அதுக்குள்ளேயும் இந்தியன் 2 படம் ஓடிடி ரிலீஸ் ஆகுதா?.... எப்போதுன்னு தெரியுமா...

என்னது அதுக்குள்ளேயும் இந்தியன் 2 படம் ஓடிடி ரிலீஸ் ஆகுதா?…. எப்போதுன்னு தெரியுமா…

- Advertisement -

இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான திரைப்படம் இந்தியன் 2. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இதன் பணிகள் முடிவு பெற்று, கடந்த ஜூலை 12ஆம் தேதி படம் வெளியானது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படத்தை சங்கர் இயக்கியிருந்தார்.

 

சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. மிகப்பெரிய பொருட்செலவில் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.

 

படத்தின் சூட்டிங் செல்லும்போது, அதற்கான காட்சிகள் அதிகமாக இருந்ததால் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தையும் சங்கர் இயக்கியிருந்தார். இதில் காஜா அகர்வால் நடித்திருக்கிறார். சேனாதிபதி கதாபாத்திரம் இளமையாக இருக்கும் காட்சியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

இதன் முன்னோட்ட காட்சிகள் இந்தியன் திரைப்படத்தின் கிளைமாக்ஸில் ஒளிபரப்பப்பட்டன. இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. ஏ ஆர் ரகுமான் இசையில், மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் ருசித்தது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் கமல் பெற்றார்.

 

இப்படியான சூழலில் அதன் இரண்டாம் பாகம் கடந்த 12ம் தேதி வெளியாகி தோல்வி அடைந்தது. அதிலும், படம் மிக மோசமாக இருந்ததாக கூறி இணையதள வாசிகள் அதனை கலாய்க்க ஆரம்பித்தனர். இதனால் கேலி கிண்டலுக்கு இந்தியன் 2 படம் ஆளானது. பழைய காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறி பலரும் அதனை கடுமையாக விமர்சித்தனர்.

 

எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் வராததால், தலைநகர் சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியேறியுள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் படம் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் இந்தியன் 2 படத்தை வாங்கி இருக்கும் நெட் பிளிக்ஸ் நிறுவனம், படத்தை விரைவில் ஓ டி டி தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. பொதுவாக ஒரு படம் நான்கு வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடி தளத்தில் வெளியாகும். ஆனால் படம் மீதான கடுமையான விமர்சனத்தால், இதனை விரைவில் திரையிட netflix நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்