- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனின் திரையுலகில் மைல்கல்லாக மாறிய மாவீரன்... ஒரே நாளில் இத்தனை கோடி ரூபாய் வசூலா?!...

சிவகார்த்திகேயனின் திரையுலகில் மைல்கல்லாக மாறிய மாவீரன்… ஒரே நாளில் இத்தனை கோடி ரூபாய் வசூலா?!…

- Advertisement -

டாக்டர், டான் படங்களின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் பிரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கடந்த தீபாவளியன்று வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் சர்தார் உடன் பிரின்ஸ் திரைப்படம் மோதிய நிலையில், இரு திரைப்படங்களும் வெளியான ஒரு வாரத்திற்குள் பிரின்ஸ் திரைப்படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டு, கார்த்தியின் சர்தாருக்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. குடும்பங்கள் கொண்டாடும் சிவகார்த்திகேயன் திரைப்படம், ஒரே நாளில் அதள பாதாளத்திற்கு சென்றதால் அடுத்த படத்தை நடிப்பதில் மிகவும் கவனமாக இருந்தார் சிவகார்த்திகேயன்.

அதற்கு ஏற்றார் போல் தேசிய விருது பெற்ற மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின், ஃபேண்டஸி ஜானரில் கதை சொல்ல சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இருவரும் சூட்டிங் கிளம்பினர். இடையில் இருவருக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதுவெல்லாம் இல்லை என்பதுபோல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று திரையரங்கிற்கு அனுப்பப்பட்டது.

- Advertisement -

இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் நேற்று வெளியானது. சமூகத்தில் பல நெருக்கடிக்கு தள்ளப்பட்டாலும் தனது கோழைத்தனத்தால் அனைத்திற்கும் பின்வாங்கும் இளைஞர், ஒரு கட்டத்தில் மாவீரன் ஆவது எப்படி கதைக்களமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. குடிசையில் வசிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். அங்கிருந்து குடிசை மாற்று வாரியத்திற்கு மாற்றப்பட்டாலும் அவரைப் பின் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

தனது கோழை தனத்தால் எதுவும் பேச முடியாமல் தற்கொலை முடிவு எடுக்கும் சிவகார்த்திகேயனுக்கு, தான் வரைந்த கார்ட்டூனிஸ்ட் கதாபாத்திரம் மூலம் சிறியதாய் ஒரு மாற்றம் கிடைக்க, அது அவர் வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பதை ரசிக்கும் வகையில் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். படத்தின் முதல் பாதி யோகி பாபுவின் டைமிங் காமெடியாலும், சிவகார்த்திகேயனின் யதார்த்தமான நடிப்பாலும் சபாஷ் போட வைத்திருப்பதாகவும், இரண்டாம் பாதி ஜனரஞ்சகமான படமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரின்ஸ் படத்தில் கோட்டை விட்டதை, சிவகார்த்திகேயன் இந்த முறை கெட்டியாக பிடித்திருக்கிறார் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் மாவீரன் பட வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவான நிலையில், நேற்று மட்டும் உலகம் முழுவதும் 13 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது. எந்தவொரு விடுமுறை தினமும் இல்லாமல் சாதாரண நாளில் இவ்வளவு பெரிய தொகையை சிவகார்த்திகேயன் ஈட்டியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் வரும் நாட்களிலும் மாவீரன் வசூலில் பட்டையை கிளப்பும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்