- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது இந்த படத்துல ஹீரோ நீடிக்கமாட்டாரா? சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தின் கிளைமேக்ஸை  லீக் செய்த பிரபலம்

என்னது இந்த படத்துல ஹீரோ நீடிக்கமாட்டாரா? சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தின் கிளைமேக்ஸை  லீக் செய்த பிரபலம்

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் “மாவீரன்”, “அயலான்” ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு தயாராகி வருகிறது. இதில் “மாவீரன்” திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளிவருகிறது. இந்த இரு திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

“மாவீரன்” திரைப்படத்தை “மண்டேலா” புகழ் மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இதில் சுனில், மிஷ்கின், மோனிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

“அயலான்” திரைப்படம் ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டது. எனினும் இத்திரைப்படத்தில் ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதால் கிராபிக்ஸ் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. ஆதலால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு வழியாக இத்திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது.

“அயலான்” திரைப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இஷா கோபிக்கர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானது.

இந்த நிலையில் “SK 21” திரைப்படத்தை குறித்த கதையை தனது வலைப்பேச்சு விடியோவில் லீக் செய்துள்ளார் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி.

அதாவது பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒரு இந்திய ராணுவ வீரரின் உண்மை கதையைத்தான் “SK 21” குழு படமாக்கி வருகிறார்களாம். அந்த ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம். அந்த உண்மை கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படமாக்க உள்ளதால் இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் உயிரிழப்பது போன்றே கதையை எழுதியுள்ளார்களாம். இவ்வாறு ஒரு தகவலை பிஸ்மி பகிர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் உயிரிழப்பது போல் படமாக்கினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்விதான் தற்போது எழுந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்