- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா செய்த மிரட்டல் சம்பவம், அடேங்கப்பா… இது வேற லெவல்தான் -...

நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா செய்த மிரட்டல் சம்பவம், அடேங்கப்பா… இது வேற லெவல்தான் – மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இதை எதிர்பார்க்கலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமானவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா பாடல் காட்சியில் நடனமாடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து அற்புதன், ஸ்டைல், முனி, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

துவக்கத்தில் இருந்தே, மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வமும் விருப்பம் கொண்டவராக மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இருக்கிறார். அதனால், அவரது சொந்த வருமானத்தில் பல கோடி ரூபாய்களை இதற்காக ஒதுக்குகிறார். ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக சொந்தமாக இல்லம் நடத்தி, அவர்களுக்கு கல்வி மற்றும் நடனப்பயிற்சி அளிக்கிறார்.

- Advertisement -

அவரது மாணவர்கள் பலரும், அவரது படங்களில் நடனக் காட்சிகளில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவரது பட விழாக்களிலும் தனது மாணவர்களை நடனமாட வைத்து, அவர்களை கவுரவப்படுத்தி வரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், மற்றவர்களுக்கு உதவுவதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் மே 1ம் தேதி மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கிய மாஸ்டர் ராகவா லாரன்ஸ், முதல் கட்டமாக 10 புதிய டிராக்டர்களை தனது சொந்த செலவில் வாங்கி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஏழை எளிய விவசாயிகளுக்கு அந்த 10 டிராக்டர்களை இலவசமாக வழங்கினார். அந்த டிராக்டர்களை அவர்கள் பயன்படுத்துவது மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மற்ற ஏழை விவசாயிகளுக்கும் தந்து உதவும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இந்த மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கிய போதே, அதற்கு வாழ்த்துகளும் பாராட்டும் தெரிவித்து அதன் துவக்க விழாவிலும் கலந்துக்கொண்டார் நடிகர் எஸ்ஜே சூர்யா. மாற்றம் சேவை அமைப்பிலும் அவரும் இணைந்துவிட்டதாக கூறினார். இந்த சூழலில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் வீட்டு வாசலில் புதிய டிராக்டர் ஒன்றை கொண்டு வந்து சஸ்பென்ஸ் ஆக நிறுத்திய எஸ்ஜே சூர்யா, இதை உங்கள் கையால் ஒரு விவசாயிக்கு வழங்க வேண்டும் என்றும் ராகவா லாரன்ஸ்சிடம் கேட்டுக்கொண்டார்.

நீங்கள் கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதித்து உங்கள் சொந்த பணத்தில் வாங்கிய டிராக்டரை நீங்கள்தான் வழங்க வேண்டும் என்று கூறி, அவரை தனது காரில் காஞ்சிபுரம் அழைத்துச் சென்ற மாஸ்டர் ராகவா லாரன்ஸ், மக்கள் முன்னிலையில் அந்த டிராக்டர் சாவியை, ஒரு விவசாயிகளுக்கு எஸ்ஜே சூர்யாவே வழங்கும்படி செய்தார். இது மாற்றம் அமைப்பு சார்பில் வழங்கப்படும் 11வது டிராக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்