- Advertisement -
Homeபொழுதுபோக்கு"சர்தார் 2" திரைப்படத்தில் இணைந்த எஸ்.ஜே சூர்யா.. எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா? - விவரம்...

“சர்தார் 2” திரைப்படத்தில் இணைந்த எஸ்.ஜே சூர்யா.. எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா? – விவரம் இதோ

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கார்த்தி அவரது நடிப்பில் கடைசியாக வெளியான “ஜப்பான்” படம் படுமோசமான தோல்வியை சந்தித்துள்ள வேளையில் எப்படியாவது அடுத்த படத்தை ஹிட் ஆக்கி விட வேண்டும் என்று அடுத்தடுத்த படங்களில் முனைப்போடு நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்திருந்த “சர்தார்” படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படத்தில் ராஷி கண்ணா, ரஜிதா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்த அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதோடு வசூல் ரீதியிலும் பெரிய லாபத்தை தந்திருந்தது. திரில்லர் ஜானரில் வெளியாகி இருந்த அந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சட்டை போடு போட்டு மிகப்பெரிய ஹிட் அடித்த அந்தப் படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஒரு அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஜூலை 12-ம் தேதியே இந்த படத்தின் ஷூட்டிங்கை படக்குழு துவங்கியுள்ளது. இந்நிலையில் “சர்தார் 2” படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் சமீபகாலமாகவே எஸ்.ஜே சூர்யா நடித்து வரும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வரும் வேளையில் இந்த படத்திலும் அவரை படக்குழு சேர்த்துள்ளது ரசிகர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிக்க துவங்கிய எஸ்.ஜே சூர்யா பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த வேளையில் தற்போது வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்