இசைஞானி இளையராஜா இசை என்றாலே மனசுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் அளவுக்கு சந்தோஷம் பீறிடும். அந்த அளவுக்கு இசையால், ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இசைஞானி என்ற சொல்லுக்கு 100 சதவீதம் பொருத்தமான ஒரு இசை சக்ரவர்த்தி இளையராஜா என்பதை யாருமே மறுக்க முடியாது.
ஆனால் இசைஞானியை தவிர்த்துவிட்டு இளையராஜாவாக அவரை பார்த்தால், மிக மிக சராசரி மனிதரை விட மிக மோசமாக அவர் நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர் என்பதை பல இடங்களில் அவரே நிரூபித்திருக்கிறார். அவர் சார்ந்த மனிதர்கள், அவரிடம் பழகியவர்களிடம் அவரது மறுபக்கத்தை காட்டியிருக்கிறார்.
உதாரணமாக கவிஞர் வைரமுத்துவுடன் அவர் கொண்ட மோதல், 36 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மீண்டும் நட்பை தொடர வைரமுத்து விரும்பியும் இளையராஜா மசியவில்லை. சாதாரண கவிஞராய் தன்னிடம் கவிதை எழுதி பாட்டு தந்த வைரமுத்து, தேசிய விருது பெற்ற கவிஞராய், நிமிர்ந்து நின்றதை காண சகிக்காமல், பொறாமை குணத்தால் வைரமுத்துவை வெறுத்தவர் இளையராஜா.
தனது சொந்த தம்பி கங்கை அமரனை, பல விதங்களில் தனக்கு பக்கபலமாக இருந்து, ஒரு உதவியாளராக ஒரு பணியாளராக வேண்டிய எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொண்ட அவரை, ஒரே நாளில் வெளியே போடா என விரட்டியவர் இளையராஜா. பாஜகவில் உள்ள கங்கை அமரனுக்கு வந்த எம்பி பதவியை, அண்ணனுக்கு கொடுங்கள் என, தனது பதவியையே இளையராஜாவுக்கு விட்டுக் கொடுத்தவர்தான் கங்கை அமரன்.
பொது இடங்களில் கேள்வி கேட்டும் செய்தியாளர்களை, உனக்கு அறிவிருக்கா? என வாய் கூசாமல் கேட்கும் இளையராஜா, பாடகர் எஸ்பிபி யுடன் சண்டை என பலமுறை இப்படி விமர்சனங்களில் சிக்கிக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, தனது தந்தை குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவருக்கே இந்த நிலமையா என்று எண்ணும் நிலையில்தான் இளையராஜா, பெத்த மகனிடமே கெத்து காட்டியது தெரிய வந்திருக்கிறது.
கார்த்திக் ராஜா கூறுகையில், நான் அம்மா பிள்ளைதான். அப்பா மீது மரியாதை தான் இருக்கிறது. வீட்லேயும் அப்பா லெஜண்ட்தான்.மத்த அப்பாக்கள் மாதிரி, அவரிடம் அங்கே போலாம், இங்கே போலாம் என கூப்பிட முடியாது. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பார். அப்பாவிடம் ஏதாவது பாட்டு போட்டு காட்டினால், ச்சீ.. த்தூ..ன்னு சொல்லிடுவார். அதனால் இசை பற்றி அப்பாவிடம் எதுவும் பேசுவதே இல்லை. அப்போது என் மனசு மிகவும் கஷ்டமாக இருக்கும், என்று கூறியிருக்கிறார் இளையராஜா மகன் கார்த்திக் ராஜா.





