ரஜினிகாந்த் போன்றே அவரது மகள்களுக்கும் சினிமா மீது நிறைய ஆர்வம் இருக்கிறது. வழக்கமாக திரையுலக வாரிசுகள் நடிகர், நடிகையாக வரவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அதில் விரைவில் அதிக பணமும், புகழும் பெற முடியும். அதனால் திரையில் முகம் காட்டவே பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா முதலில் தனுஷ் நடித்த 3 என்ற படத்தை டைரக்ட் செய்தார். படம் சரியாக போகவில்லை. அடுத்து கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார். அதுவும் பிளாப் ஆனது. இப்போது லால் சலாம் என்ற படத்தை டைரக்ட் செய்த நிலையில், இன்று லால் சலாம் ரிலீஸ் ஆகியுள்ளது.
அதே போல் நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா, முதலில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை டைரக்ட் செய்தார். அடுத்து, தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. இப்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிப்பில் 3வது படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட் செய்யப்படுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அவர்களது குடும்பத்திலேயே மியூசிக் ராக் ஸ்டார் என அழைக்கப்படும் அனிருத் என்ற இசையமைப்பாளர் இருக்கும்போதே ஏன், ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்படுகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான பதில் தெரிய வந்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட, தர்பார், ஜெயிலர் உள்பட கோலமாவு கோகிலா, டாக்டர் என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் அனிரூத். கடந்த சில ஆண்டுகளில் அவரது இசைக்கு ஏகப்பட்ட கிராக்கி ஆகி வருகிறது. ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ. 10 கோடி வரை அவர் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. அனிரூத் இசைதான் ஜெயிலர் படத்தையே வேற லெவலுக்கு கொண்டு சென்றதாக, மேடையில் பேசிய ரஜினியே குறிப்பிட்டு பேசினார்.
இந்நிலையில், லால் சலாம் படத்துக்கு இசையமைக்க முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அனிரூத்திடம் பேசியிருக்கிறார். அவர் மறுத்த பிறகுதான், ஏஆர் ரகுமானிடம் பேசி அவர் கமிட் ஆகியிருக்கிறார். அதுமட்டுமின்றி பெரிய இசையமைப்பாளர் ஆகி விட்டதால், அனிரூத் அதிக தலைகனத்துடன் ஆட்டிட்யூட் காட்டுவதால், இனி நம் படங்களில் அனிரூத் இசையமைக்க வேண்டாம் என ரஜினி மகள்கள் இருவரும் முடிவெடுத்துள்ளனர். இதில் அப்பா ரஜினியே தலையிட்டாலும், இந்த முடிவில் மாற்றம் இருக்க கூடாது என்றும் இருவரும் பேசியதாக தெரிய வந்துள்ளது.





