இயக்குனர் சசி இயக்கிய ரோஜாக்கூட்டம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ஸ்ரீகாந்த். இந்த படத்தில் நாயகியாக பூமிகா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் பார்த்திபன் கனவு போஸ் கனா கண்டேன் மெர்க்குரி பூக்கள் என பல படங்களில் ஸ்ரீகாந்த் நடித்தார்.
அவர் நடித்த பல படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்த நிலையில் ஒரு கட்டத்துக்கு பிறகு ஸ்ரீகாந்த் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது வெப் சீரிஸ் ஒன்றிலும் தீக்கிரை என்ற படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்து வந்தார். இந்த சூழலில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் இப்போது புழல் சிறையில் 15 நாள் சிறைக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் தர வகுப்பு சிறையில் அவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் தன் மகளுக்கு உடல் நலமில்லை என கோர்ட்டில் ஜாமீன் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த குற்றம் நிரூபணம் ஆனால் 10 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த போதைப்பொருள் விவகாரத்தில் கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு பல ஹிட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை அவர் பயன்படுத்தாமல் தவற விட்ட தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அவரது சித்தப்பா ஸ்ரீகாந்தின் கால்ஷீட் விவகாரம் கதைகளை கேட்ட நிலையில், பல முக்கிய இயக்குனர்களின் நல்ல படங்களில் ஸ்ரீகாந்தை நடிக்க விடாமல் அவர் கெடுத்து விட்டதும் இப்போது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக 12பி படத்தில் ஷ்யாமுக்கு பதிலாக நடிக்க இருந்தவர் ஸ்ரீகாந்த் தான். அதே போல் மாதவன் நடித்த ரன் படத்திலும் நடிக்க வேண்டியவர் ஸ்ரீகாந்த் தான். மணிரத்னம் இயக்கிய ஆயுதஎழுத்து படத்தில் சித்தார்த் கேரக்டரில் நடிக்க முதலில் ஸ்ரீகாந்தை தான் கேட்டுள்ளனர். அதே போல் நான் கடவுள் பிச்சைக்காரன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய படங்களில் முதலில் ஸ்ரீகாந்தை தான் ஹீரோவாக கேட்டுள்ளனர். அவர் நடிக்காததால் மற்ற ஹீரோக்கள் நடித்துள்ளனர்.





