நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற படம் மூலம் அறிமுகமானார். இதில் கவுண்டமணியிடம் ஒரு காட்சியில் செம்மையாக உதை வாங்குவர். முதல் படத்திலேயே கவுண்டமணியிடம் உதவி வாங்கிய ராசியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகரானார் நடிகர் வடிவேலு என்று பலரும் கிண்டலாக சொல்வதுண்டு.
வடிவேலுவை பொறுத்தவரை 1990 முதல் 2010 வரை அவருடைய காமெடி ராஜ்ஜியம் தமிழ் சினிமாவில் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு வடிவேலுவுக்கு சினிமா மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்தது. அதற்கு காரணம் அவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியல் பக்கம் சென்றதும் கேப்டன் விஜயகாந்த் குறித்து அவதூறாக பேசியதும் தான். அதனால் வடிவேலின் மீது பலருக்கும் பலத்த சங்கடம் ஏற்பட்டது.
பல கோடிகள் பணத்தை வாங்கிக்கொண்டு, திமுக ஆதரவு பேச்சாளராக பிரச்சார மேடைகளில் கேப்டன் விஜயகாந்த் விமர்சித்து தாறுமாறாக அவர் பேசியது வடிவேலு ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் அதுவரை வடிவேலு படங்கள் என்றாலே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்று கொண்டாடினார்கள். ஆனால் 10 ஆண்டுகளாக அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. யாருமே அவருக்கு வாய்ப்பு தர முன்வரவில்லை.
சுமார் 10 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த வடிவேலுவுக்கு, பழைய வரவேற்பு இல்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பு வரவேற்பை பெற்றது. பி வாசுவின் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படம் வெளியான 4 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுந்தர் சி நேர்காணல் ஒன்றில் பேசுகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கைப்புள்ள கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விவேக் தான். அவரைத்தான் முதலில் அந்த கேரக்டரில் நடிக்க வைக்க நினைத்திருந்தேன்.
ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் அதற்கு காரணம். ஆனால் பிறகு வீராப்பு படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். அதன் பிறகு பல படங்களில் அவருடன் நானும் சேர்ந்து பணியாற்றினோம். அவர் கடைசியாக என்னுடைய அரண்மனை 3 படத்தில்தான் நடித்தார் என்று சுந்தர் சி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





