கடந்த 10 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு புதிய படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அந்த படம் நல்ல நாளில், பண்டிகை நாளில் ரிலீஸ் ஆகிறதா என்பதை மட்டும் தான் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கவனிப்பார்கள். ஆனால் இப்போது ஒரு படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மற்ற பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகிறதா என்பதை தான் அதிக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
ஏனென்றால் பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது மற்ற நடிகர்களின் படங்கள் காணாமல் போய்விடும். எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது. வசூலும் கணிசமான லாபத்தை தராது என்பதால் மற்ற படங்கள் ரிலீஸ் குறித்து பெரிய போராட்டம் தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ்க்காக பல படங்கள் தங்களது ரிலீஸை தள்ளிப் போட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ரிலீஸ் ஆக உள்ளது. கருப்பு படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இந்த படமும் சூர்யாவுக்கு தொடர் வெற்றியை கொடுக்கும். பெரிய அளவில் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நடிகை நயன்தாரா நடிகர் கவின் இணைந்து நடித்த ஹாய் படமும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது.
அதேபோல் நடிகர் விஷால் அவரே டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்துள்ள மகுடம் படமும் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படி சூர்யா நயன்தாரா விஷால் என 3 பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது முன்முனைப் போட்டியாக உள்ளது. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வருகிற அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதே நாளில் சுந்தர் சி இயக்கிய புருஷன் படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த படத்தில் நடிகர் விஷால் நயன்தாரா இணைந்து நடித்திருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் படம் வெளியாகும் அதே நாளில் சுந்தர் சி அவர் இயக்கிய புருஷன் படத்தை வெளியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சுந்தர் சி படங்களுக்கு என தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அது மட்டும் இன்றி இந்த படத்தில் காவலய்யா பாடல் போல ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு தமன்னா அசத்தலான நடனமாடி இருக்கிறார்.
நிச்சயமாக இந்த பாடல் காட்சி புருஷன் படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்களை தியேட்டர்களுக்கு சுண்டி இழுக்கும் என்றும் கூறப்படுகிறது. கமல் தயாரிப்பில் ரஜினி படத்தை இயக்குவதாக இருந்து வெளியேறிய சுந்தர் சி திடீரென விலகினார். இப்போது அவர் ஜெயிலர் 2 படம் வெளியாகும் நேரத்தில் தனது புருஷன் படத்தை ரிலீஸ் செய்வது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியுடன் சுந்தர் சி நேரடியாக மோதுவது சரிதானா என்றும் கேள்வி எழுந்துள்ளது.





