கடந்த 1975ம் ஆண்டில் இயக்குனர் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். அடுத்த 2025ம் ஆண்டில் சினிமா வாழ்க்கையில் தனது 50வது ஆண்டு பொன்விழாவை ரஜினி கொண்டாட இருக்கிறார். இதுவரை 170 படங்களில் நடித்துள்ள ரஜினி, 171வது படமாக கூலி படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 1975ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 25 ஆண்டுகளில் 154 படங்களில் நடித்த ரஜினிகாந்த், 2001ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மொத்தம் 16 படங்களில்தான் நடித்துள்ளார். ஆனாலும் அவர்தான் சூப்பர் ஸ்டாராக மக்களால் கொண்டாடப்படுகிறார். 73 வயதான நிலையிலும் ஜெயிலர், வேட்டையன், கூலி படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக இருந்தும் இன்னும் படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அறிமுக நடிகர் போல பணிவும், அடக்கமும் காட்டுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி இருக்கும் பகுதிக்கு இயக்குனர் திடீரென வந்தால் உடனே எழுந்து நிற்பார், அவர்கள் முன் சிகரட் பிடிப்பதை ரஜினி கட்டாயமாக தவிர்ப்பார் என்று சக நடிகர்கள் பலரும் கூறியிருக்கின்றனர்.
மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் பேக்கப் சொல்லாமல் ரஜினி வீட்டுக்கு கிளம்ப மாட்டார். கேரவன் வேனுக்கு பாத்ரூம் செல்வதாக இருந்தாலும் இயக்குனரிடம் சொல்லி பர்மிஷன் கேட்டு விட்டுதான் செல்வார். மேலும், யாரை பற்றியும் எந்த இடத்திலும் தவறாக விமர்சிக்கும் பழக்கம் ரஜினிக்கு கிடையாது. மேலும் வெற்றிப் படம் தந்த இயக்குனரை உடனடியாக அழைத்து, தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினி தருவார். பேட்ட கபாலி ஜெயிலர் வேட்டையன் கூலி என அந்த பார்மூலா தொடர்கிறது.
இப்படி பார்த்து பார்த்து கவனமாக ரஜினி அடியெடுத்து வைப்பதால்தான் அவரது இந்த பார்மூலா தொடர்ந்து வெற்றியை தருகிறது. ஆனால் ஜெயம் ரவி, சூர்யா, விஷால் போன்றவர்கள் எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற மனநிலையில் படத்தின் கதைகளை தேர்வு செய்கின்றனர். குறிப்பாக மேடைகளில், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி தங்களது இமேஜை அவர்களே சிதைத்து கொள்கின்றனர்.
நடிப்பு திறமை இருந்தும், நல்ல வாய்ப்புகள் தேடி வந்தும் அதை சூர்யா போன்றவர்கள் கெடுத்துக்கொள்வதே அவர்களது செயல்பாடுகளால்தான். குறிப்பாக பாலா இயக்கத்தில் வணங்கான், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு போன்ற படங்களில் நடிக்கும் அற்புத வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழித்த சூர்யா, இப்போது கங்குவா மொக்க படத்தில் நடித்துவிட்டு விமர்சனத்தில் சிக்கி உள்ளார். ஜெயம் ரவிக்கும், விஷாலுக்கும் தொடரும் தோல்விகள் இனி அவர்கள் நடிப்பது அவசியம்தானா என்ற கேள்வியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.





