- Advertisement -
Homeபொழுதுபோக்குகர்நாடகாவில் கமல் நடித்த தக்லைஃப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை; கன்னட திரைப்பட வர்த்தக சபைக்கு நோட்டீஸ்...

கர்நாடகாவில் கமல் நடித்த தக்லைஃப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை; கன்னட திரைப்பட வர்த்தக சபைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 5ம் தேதி தக்லைஃப் படம் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். கமலின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சித்ராமையாவே கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கன்னட அமைப்புகளும் கமலுக்கு பலத்த கண்டனங்களை எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால் தக்லைஃப் படத்தை கர்நாடகா மாநிலத்தில் வெளியிட அந்த மாநிலத்தின் கன்னட திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

- Advertisement -

இதை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன், கர்நாடகாவில் தக்லைஃப் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா அரசு உத்தரவிட வேண்டும் என்று வழக்குமனு தாக்கல் செய்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி, கமல்ஹாசனை கடுமையாக சாடினார். எந்த அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் சொன்னார்? அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? கமல்ஹாசன் என்ன மொழியியல் வல்லுநரா? அவர் எதுக்காக இப்படி பேசி கர்நாடகா மக்கள் மத்தியில் விவகாரம் செய்கிறார் என்று பேசிய நீதிபதி, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும்படி அறிவுரை கூறினார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

- Advertisement -

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறினார். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை வருகிற 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதுவரை தக்லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடவும் தடை விதித்தார். இந்நிலையில் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

அதில் தக்லைஃப் படத்துக்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்தது நீதித்துறையின் அதிகாரத்தை மீறியது. அதனால் இந்த தடையை நீக்கி படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு கன்னட சினிமா வர்த்தக சபைக்கு தக்லைஃப் படத்திற்கு எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்