இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மே 1ம் தேதி ரெட்ரோ படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் மூலம் மொத்தமாக ரூ. 235 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த படத்தின் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 45. இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். அய்யனார் சுவாமி கதை மற்றும் நீதிமன்ற வழக்குகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
சூர்யா 45 படத்தில் நடிகர் சூர்யா மற்றும் திரிஷா லப்பர் பந்து நடிகை சுவாசிகா எந்திரன்ஸ் காளி வெங்கட் நட்டி நடராஜ் ஷிவதா நாயர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் இந்த படத்தி்ல முக்கிய கேரக்டரில் நடித்தஇருக்கிறார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகிறார்.
சூர்யா நடித்து வரும் இந்த 45வது படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், கிளைமாக்ஸ் கோர்ட் காட்சிகள் சென்னையில் கோர்ட் செட் அமைத்து 2 வாரங்களாக படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் நாளை ( 20ம் தேதி) இந்த படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியின் பிறந்தநாள் என்பதால், சூர்யா 45 படத்தின் தலைப்பை நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு வேட்டை கருப்பு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
சில தினங்களுக்கு முன் படத்துக்கு கருப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இப்போது வேட்டை கருப்பு என படத்தின் டைட்டில் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவிட்டதால் கடைசி நேரத்தில் படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி படத்தின் டைட்டிலை வேட்டை கருப்பு, கருப்பு என இல்லாமல் வேறு ஒரு புதிய பெயரை மாற்றி இருப்பாரா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.





