- Advertisement -
Homeபொழுதுபோக்குஆசை படத்தில் முதலில் நடிக்க இருந்தது அந்த நடிகர்தான், அவர் வராததால் அஜீத்குமார் ஆசை நாயகனாக...

ஆசை படத்தில் முதலில் நடிக்க இருந்தது அந்த நடிகர்தான், அவர் வராததால் அஜீத்குமார் ஆசை நாயகனாக மாறினார் – அந்த சான்ஸை தவறவிட்ட ஹீரோ இவரா?

- Advertisement -

சினிமா வாழ்க்கையில் ஏதாவது ஒரு படம், அல்லது படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் நடிப்பதன் மூலமாக கூட பெரிய வாய்ப்பை பெற முடியும். அதுவே அடுத்தடுத்த வளர்ச்சிக்கு பாலமாக அமையும். அப்படிதான் சினிமாவில் வெற்றி பெற்ற பலரும் இருக்கின்றனர். அதே போல் தேடி வந்த வாய்ப்பை தானாக மறுத்து இழந்து, காணாமல் போனவர்களும் சினிமாவில் நிறைய இருக்கின்றனர்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில், பரோட்டா சாப்பிடும் போட்டியில் காமெடியில் கலக்கிய சூரிதான், இன்று வெற்றிமாறன், துரை செந்தில்குமார் படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்துக்கு குடை பிடிக்கும் கேரக்டரில் நடித்த வடிவேலு, தமிழ் சினிமாவில் நகைச்சுவை சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர். துணை நடிகர்களில் ஒருவராக கும்பலில் ஒருவராக வந்து சென்ற விஜய் சேதுபதி ரஜினி, கமல், விஜய், ஷாருக்கானுக்கே வில்லனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

இப்படித்தான் சினிமா ஒருவரை திடீரென்று அதிர்ஷ்டசாலியாக்குகிறது. தூக்கி உச்சாணியில் கொண்டு போய் உட்கார வைக்கிறது. தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் வந்தவர்தான் கமல்ஹாசன். அவரை கே. பாலசந்தர் நடிகராக நடிக்க வைக்க, இன்று உலகநாயகன் கமல்ஹாசன் என்ற பட்டத்துடன் கமல்ஹாசன் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

இதுபோன்று சில படங்களில் நடிக்கும்போது நடிகர்களின் இமேஜ் ரசிகர்களின் மத்தியில் உயர்ந்து விட்டால், எந்த சின்ன நடிகரும் பெரிய நடிகராக மாறிவிட முடியும். அதே போல் கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டால் மீண்டும் அந்த இடத்தை பிடிக்க போராட வேண்டும்.

கடந்த 1990களில் மிகப்பெரிய இயக்குநர்களின் ஒருவராக கவனிக்கப்பட்டவர் வசந்த். கேளடி கண்மணி, நேருக்கு நேர், ஆசை, பூவெல்லாம் கேட்டுப்பார், ரிதம் போன்ற பல நல்ல படங்களை தந்தவர். அவரது ஆசை படம் 1995ம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம்தான் அஜீத்குமாருக்கு மிகப் பெரிய அடையாளம் கிடைத்தது. அதன்பிறகு காதல் கோட்டை படம், அவரை முன்னணி நடிகராக்கியது.

இந்நிலையில் ஆசை படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான். அவரை தான் அஜீத் நடித்த கேரக்டரில் நடிக்க வைக்க வசந்த் திட்டமிட்டிருக்கிறார். அதற்கேற்ப கதையை உருவாக்கி இருக்கிறார். ஆனால் அப்போது கார்மென்ட்ஸ் பிஸினஸில் பிஸியாக இருந்த சூர்யா, ஆசை படத்தில் நடிக்க மறுத்து விட்டார். அதன்பிறகுதான் ஆசை படத்தில் அஜீத்குமார் நடித்ததாக, சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குநர் வசந்த் கூறியிருக்கிறார்.

சற்று முன்