நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டார். அவர் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குனர்கள் இயக்கத்தில் பிற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் அவர் தயாரிப்பது வழக்கம். இப்படி அவர் தயாரித்த பல படங்கள் பெரிய அளவில் ஜெயித்திருக்கின்றன.
கடந்த ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய்பல்லவி நடித்த அமரன் படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தார். அந்த படம் ரூ. 325 கோடியை குவித்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். அதே போல் கமல் தயாரித்த படம்தான் தக்லைஃப் படம். ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 4 நாட்களில் இதுவரை 76 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது.
நடிகர் கமல்ஹாசனை பொருத்த வரை பல படங்களில் நாயகனாக நடித்து சம்பாதித்து சேர்த்த பணத்தில் பெரும்பகுதியை இப்படி தோல்வி படங்களை தயாரித்து இழந்து வருவதாக அவரது மகள்களான ஸ்ருதிஹாசன் அக்சராஹாசனே பல நேர்காணல்களில் வருத்தப்பட்டு பேசியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் தங்களது அக்கா அனுஹாசன் முன்னிலையில் கமலுடன் பெரிய பஞ்சாயத்தில் மகள்கள் இருவரும் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
அப்போது இனிமேல் நீங்கள் படங்களில் நடிக்க மட்டுமே ஆர்வம் காட்ட வேண்டும். பிற நடிகர்களின் படங்களை தயாரித்து பெரும் தொகையை இழந்த நஷ்டமடைய கூடாது என்று பேசியிருக்கின்றனர். சித்தப்பா கமலிடம் இதுகுறித்து அனுஹாசனும் வலியுறுத்திய நிலையில், கமல் அதற்கு ஓகே சொன்னதாக அப்போது தகவல் வெளியானது. ஆனாலும் விக்ரம் அமரன் படங்களை தொடர்ந்து கமல் படங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வமாக இருந்து வருகிறார்.
தக்லைஃப் படம் வியாபார ரீதியாக விமர்சன ரீதியாக கடும் இழப்பை சந்தித்துள்ள நிலையிலும் கமல் தனது அடுத்த படமான ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கும் படத்தில் ஆயத்தமாகி விட்டார். மேலும் வீர தீர சூரன் பட இயக்குனர் அருண்குமார் இயக்கும் படத்தையும் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க ரெடியாகி விட்டார்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது ஏற்கனவே அமரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனா, அல்லது விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சூர்யாவா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கப் போவது சூர்யா தான். அருண்குமார் இயக்கும் படத்தில் ஹீரோவாக சூர்யாவை தான் கமல்ஹாசன் ஓகே செய்திருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





