- Advertisement -
Homeபொழுதுபோக்குதுரோகம் செய்வது தெரிகிறதா? கடவுளிடம் புலம்பும் நிலைக்கு வந்துவிட்டீர்களா? - இயக்குனர் செல்வராகவன் போட்ட திடீர்...

துரோகம் செய்வது தெரிகிறதா? கடவுளிடம் புலம்பும் நிலைக்கு வந்துவிட்டீர்களா? – இயக்குனர் செல்வராகவன் போட்ட திடீர் பதிவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் செல்வராகவன். இவரது தம்பி நடிகர் தனுஷ். காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி புதுப்பேட்டை நானே வருவேன் ஆயிரத்தில் ஒருவர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன். விரைவில் செல்வராகவன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடித்த மென்டல் மனதில் படம் வெளியாக உள்ளது.

மேலும் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ம் பாகத்தையும் செல்வராகவன் இயக்கிக்கொண்டு வருகிறார். இயக்குனராக மட்டுமின்றி சில ஆண்டுகளாக பல படங்களில் செல்வராகவன் நடித்தும் வருகிறார். இதில் பீஸ்ட் மார்க் ஆண்டனி ராயன் பகாசுரன் போன்ற படங்களில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாட்டால் திருமணமான சில ஆண்டுகளில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். பிறகு கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் 2வது திருமணம் செய்து கொண்டார். 14 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கீதாஞ்சலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவனுடன் அவர் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்களை எல்லாம் சில தினங்களுக்கு முன்பு திடீர் என நீக்கிவிட்டார்.

சமீபத்தில் குலதெய்வம் கோவிலுக்கு தனுஷ் செல்வராகவன் கஸ்தூரி உள்ளிட்டோர் குடும்பத்துடன் சென்ற போது அங்கு கீதாஞ்சலி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பெயரை கீதாஞ்சலி செல்வராகவன் என்றுதான் அவர் பயன்படுத்தி வருகிறார். இதற்கிடையே செல்வராகவன் கீதாஞ்சலி இடையே மோதல் காரணமாக விரைவில் இருவரும் பிரிய உள்ளதாகவும் தகவல் வேகமாக பரவியது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் செல்வராகன் வெளியிட்ட எக்ஸ் பதிவு ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் செல்வராகவன் கூறியிருப்பதாவது, திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாக தெரியும். நீ எல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்.

அப்போது அமைதியாக இருங்கள். சில காலம்தான். பெரும் மழை பனியாய் போகும். அனைத்தும் சரியாகிவிடும். இது கடவுளின் நியதி என செல்வராகவன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். செல்வராகவனுக்கு துரோகம் செய்தது யார், கீதாஞ்சலிக்கும் அவருக்கும் குடும்பத்தில் பிரச்சனை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனுஷை தொடர்ந்து செல்வராகவனும் தனது 2வது மனைவியை பிரிகிறாரா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்