நடிகர் சூர்யா நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். கருப்பு பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் வெங்கி அட்லூரி நடிகர் சூர்யாவுக்கு சொன்ன கதை இதுவல்ல. கார் கம்பெனி ஓனராக ஒரு தொழிலதிபர் வெற்றி பெற்ற கதைதான் அவரிடம் முதலில் சொல்லப்பட்டது. அந்த பயோபிக் கதை நன்றாக இருந்தாலும் அதில் நடிக்க நடிகர் சூர்யா மறுத்துவிட்டார்.
அதற்கு முக்கிய காரணம், சூரரைப் போற்று படம் அதுபோன்ற ஒரு பயோபிக் படம்தான். அடுத்து தசெ ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கப் போவதும் ஒரு பயோபிக் படம்தான். இந்த படத்தில் சென்னையை சேர்ந்த 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் கேரக்டரில் அவர் நடிக்க உள்ளார்.
அதனால் அடுத்தடுத்து பயோபிக் கதை வேண்டாம் என்பதால் தான் இயக்குனர் வெங்கி அட்லூரி சொன்ன பயோபிக் கதையில் நடிக்க சூர்யா முதலில் மறுத்து விட்டார். அதன்பிறகுதான் அவர் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற புதிய கதையை சொல்லி அந்த படத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.
இந்நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கோவையை சேர்ந்தவர் என்பதால் கோவையில் அந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார். கோவையில் பிரபலமான கொடீசியா வளாகத்தில் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கருப்பு படத்துக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படமும் சூப்பர் ஹிட் ஆக அமைந்து விட்டால் தமிழ் சினிமாவில் அடுத்த நம்பர் 1 இடத்துக்கு நடிகர் சூர்யா முன்னேறி விடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





