- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா - கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா... கேட்கவே செமையா இருக்குதே... ஆனா...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா… கேட்கவே செமையா இருக்குதே… ஆனா அதுலயும் ஒரு சிக்கல் உள்ளதாம்… அட போங்கப்பா…

- Advertisement -

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் தோல்வி அடைந்தது. படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தாலும் திரைக்கதையில் அந்த அளவு அழுத்தம் இல்லை என்பதாலேயே இப்படி ஒரு ரிசல்ட் கிடைத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 100 கோடி ரூபாயை கூட தொடவில்லை.

 

- Advertisement -

இப்படியான சூழலில் தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர் ஜே பாலாஜி இந்த படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் கலந்த பேண்டஸி படமாக இது உருவாகிறது. ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி தனது நண்பர் சரவணன் உடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

 

- Advertisement -

நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. நல்ல ஒரு என்டர்டெய்னர் திரைப்படமாக இது அமைந்ததால் பலரிடத்திலும் வரவேற்பை பெற்றது. இப்படியான சூழலில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

 

ஆனால் இதில் ஆர் ஜே பாலாஜி இல்லை அதற்கு பதில் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். அதேசமயம் ஆர் ஜே பாலாஜி திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. இப்படியான சூழலில் தான் அந்த கதையை சற்று மாற்றியமைத்து அதில் சூர்யாவை நடிக்க வைத்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதேசமயம் படத்தில் திரிஷாவும் இருக்கிறார். இதன் படப்பிடிப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் தொடங்கியது. அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 45 நாட்கள் படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் நடுவே சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. வெறும் நான்கரை மாதங்களில் இதற்கான ஒட்டுமொத்த பணிகளையும் கார்த்திக் சுப்பராஜ் முடித்தார். இந்தப் படத்திற்கு கல்ட் என டைட்டில் வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதேசமயம், நடிகர் அதர்வா இதே தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் இருந்து இந்த தலைப்பை வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்