- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமணமான 5 ஆண்டுகளில் கணவரை விவாகரத்து செய்ய இருக்கும் சுப்ரமணியபுரம் படத்தின் நடிகை - விவரம்...

திருமணமான 5 ஆண்டுகளில் கணவரை விவாகரத்து செய்ய இருக்கும் சுப்ரமணியபுரம் படத்தின் நடிகை – விவரம் இதோ

- Advertisement -

தமிழ் திரையுலகிற்கு எத்தனையோ கதாநாயகிகள் வெளி மாநிலங்களில் இருந்து வந்து நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நிலையான அந்தஸ்தை பிடிக்க முடியாமல் போராடி வருகின்றனர். ஆனால் ஒரு சில கதாநாயகிகள் குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்தும் புகழ் பெற்றும் இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த 2007-ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் படத்தில் மூலம் அறிமுகமான சுவாதி ரெட்டி அந்த முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மனதை கவர்ந்தார்.

Swati-2

அதோடு அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்ததோடு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அவரது முகத்தை பரிச்சயம் செய்தது. அதனை தொடர்ந்து அவர் கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எச்சன், யாக்கை, திரி என பல படங்களில் நடித்திருந்தாலும் இன்றளவும் சுப்பிரமணியபுரம் சுவாதி என்றே ரசிகர்களுக்கு அவரை அடையாளம் தெரியும்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள சுவாதி ரெட்டி கடந்த 2018-ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் வாசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் கணவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

Swati-1

இந்நிலையில் சமீப காலமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கணவர் விகாசுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் வழக்கமாக இதுபோன்று நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இருந்து கணவரின் புகைப்படங்களை நீக்கினால் விவாகரத்து முடிவைத்தான் எடுப்பார்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் சுவாதியும் அவரது கணவரின் புகைப்படங்களை நீக்கியதை அடுத்து விரைவில் நடிகை சுவாதியும் கணவர் விகாசிடம் இருந்து விவாகரத்து பெற இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்