- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஷால் - சாய் தன்ஷிகா காதலுக்கு விதை போட்டவர் நடிகர் டி ராஜேந்தர் தான்...

நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா காதலுக்கு விதை போட்டவர் நடிகர் டி ராஜேந்தர் தான் – இது என்னங்க புதுக்கதையா இருக்கு?

- Advertisement -

சென்னையில் நேற்று நடந்த யோகிடா படவிழாவில் பங்கேற்ற படத்தின் நாயகி நடிகை சாய் தன்ஷிகா, வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி நடிகர் விஷாலை நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று வெளிப்படையாக அறிவித்தார். அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஷாலும், நானும் சாய் தன்ஷிகாவும் காதலிக்கிறோம். கடைசி வரை அவரை சந்தோசமாக நான் வைத்திருப்பேன் என்று பேசினார்.

மேலும் நாங்கள் இருவரும் நல்ல புரிதலுடன் நல்ல தம்பதியாக இருப்போம். வடிவேலு கோவை சரளா போல் சண்டை போட்டுக் கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்வோம் என்றும் நடிகர் விஷால் வெளிப்படையாக கூறினார். ஆனால் நடிகர் விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்று ரசிகர்களுக்கு பலத்த சந்தேகம் நீடித்தது.

- Advertisement -

ஏனென்றால் ஒரு படத்தில் கூட இருவரும் இணைந்து நடித்தது இல்லை. இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இருக்கவும் அதற்கான பின்னணியும் இல்லை. நடிகர் சங்கப் பணிகளில் கூட விஷால் குழுவில் தன்ஷிகா இணைந்து பணியாற்றியதும் இல்லை. கடந்த ஒரு மாதமாக தான் சாய் தன்ஷிகாவை காதலித்து வருகிறேன் என்றும் நடிகர் விஷால் தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

அப்படிப்பட்ட சூழலில் இப்படி திடீரென இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இணைய காரணம் என்ன? இவர்கள் காதலிக்கும் அளவுக்கு எப்படி ஒரு சூழ்நிலை உருவானது என்று குழப்பங்களுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. சாய் தன்ஷிகா – விஷால் காதலுக்கு விதை போட்டவர் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டில் சாய் தன்ஷிகா நடித்த விழித்திரு என்ற படத்தில் விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் டி ராஜேந்தர் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய சாய் தன்ஷிகா டி ராஜேந்தர் பெயரை மறந்து போய், அவரது பெயரை குறிப்பிடாமல் பேசிவிட்டார். அப்போது அங்கிருந்த டி ராஜேந்தர் எழுந்து வந்து, மேடை நாகரிகம் தெரியாதா? என்னை மதிக்காமல் இருப்பதா? என் பெயரைமறந்தது சரியா என்று வெளுத்து வாங்கி விட்டார். பலமுறை ஸாரி கேட்டும் அவரை டிஆர் மன்னிக்கவில்லை. இதனால் அந்த மேடையில் சாய் தன்ஷிகா கதறி கதறி அழுதார்.

இந்த விவகாரம் இணையதளங்களில் வைரலானது. தன்ஷிகாவுக்கு ஆதரவாக பல நடிகர்கள் நடிகைகள் குரல் கொடுத்தனர். அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஷால் தன்ஷிகாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை பார்த்துவிட்டு நடிகர் விஷாலுக்கு தன்ஷிகா நன்றி தெரிவித்திருக்கிறார். அப்போதுதான் அவர்களுக்குள் முதல்முறையாக அறிமுகமும் நட்பும் தொடங்கி இருக்கிறது. அதன்பிறகு சில பிரச்னைகளில் தன்ஷிகா வீட்டுக்கே சென்று விஷால் பேசி இருக்கிறார். அதுவே ஒருகட்டத்தில் காதலாக மாறியிருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்