தமிழ்நாட்டில் இப்போது திமுக ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதலில் எம்எம்ஏ, பிறகு விளையாட்டுத்துறை அமைச்சர் இப்போது தமிழ்நாட்டில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
முதலில் கருணாநிதி முதல்வராக இருந்தார். பிறகு ஸ்டாலின் அவரது இடத்துக்கு வந்துள்ளார். இப்போது துணை முதல்வராக உள்ள உதயநிதி, ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக திட்டமிட்டுள்ளார். உதயநிதி முதல்வராகும் பட்சத்தில் அடுத்து அவரது வாரிசாக உள்ள இன்பநிதி துணை முதல்வராகி விடுவார். திமுகவில் வாரிசு அரசியல் கொடி கட்டி பறப்பதை அவரது கட்சியினரே அறிந்த உண்மைதான்.
இந்த சூழலில் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பொருத்தவரை திமுகவின் போட்டியாளராக முதல்வர் பதவிக்கு நிற்கப் போவது உதயநிதிதான். ஏனெனில் முதுமை காரணமாக ஸ்டாலின் இப்போதே தளர்ந்து விட்டார். நடக்கவும், வாகனத்தில் ஏறி இறங்கவும் அவர் சிரமப்படும் நிலையில் அவரால் இனி கருணாநிதி போல் ஓய்வு தலைவராக மட்டுமே செயல்பட முடியும் என்கின்றனர் திமுகவினர்.
அதனால்தான் உதயநிதியை களத்தில் இறக்கி விட்டுள்ளார் ஸ்டாலின். அதனால் வருகிற சட்டசபை தேர்தலை உதயநிதிக்கும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் விஜய்க்கும் கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் கோவையில் கிறிஸ்தவர்கள் நடத்திய விழாவில் பங்கேற்ற உதயநிதி, நான் கிறிஸ்தவன் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்போதும் நான் உறுதியாக கூறுகிறேன். நான் கிறிஸ்தவன்தான் என்று பகிரங்கமாக கூறினார். ஏனெனில் இவரது மனைவி கிருத்திகா, கிறிஸ்தவ மதம் சார்ந்தவர். அதனால் நான் கிறிஸ்தவன் என்கிறார் உதயநிதி.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், நடிகர் விஜய் கிறிஸ்தவ மதம் சார்ந்தவர். அவரது முழுப்பெயரே ஜோசப் விஜய்தான். அதனால் வருகிற சட்டசபை தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் விஜய் பக்கம் போய்விடக் கூடாது என்பதால், நான் கிறிஸ்தவன் என உதயநிதி இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார் என, தளபதி கட்சியினர் கலாய்த்து வருகின்றனர். இதுவரை எத்தனை முறை ஞாயிறு தினங்களில் உதயநிதி சர்ச்சுக்கு சென்றார் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.





