- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை இத்தனை நடிகர்கள் பார்த்து விட்டார்களா... அதிலும்...

அடேங்கப்பா தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை இத்தனை நடிகர்கள் பார்த்து விட்டார்களா… அதிலும் ரஜினிக்கு எல்லாம் இந்த திரைப்படத்தில்தான் கிடைத்ததா… ஆச்சரியமூட்டும் தகவல்…

- Advertisement -

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகி விட்டால் அது எத்தனை நாட்கள் ஓடுகிறது, அதன் விமர்சனம் என்பதை பார்ப்பதற்கு பதில், அதன் வசூலை தான் மிகப்பெரிய அளவில் அறிவிக்கிறார்கள். வணிக நோக்கத்தோடு மட்டுமே இங்கு திரைப்படங்கள் வெளியாவதால், இந்த விஷயம் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

 

ஆனால் சில திரைப்படங்கள் எடுத்து எடுப்பிலேயே, 100 கோடியை எட்டி விட்டதாக இப்போது பலரும் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் இந்த வசூலை அடைவது என்பது பலருக்கும் குதிரைக்கொம்பாகவே இருந்து வந்தது. ரசிகர் மனதில் நின்று பேசிய, பலராலும் கொண்டாட்டப்பட்ட திரைப்படங்கள் கூட 100 கோடி என்ற உச்சத்தை எட்டவில்லை.

 

காலங்கள் மாற, காட்சியிலும் மாறியதால் தற்போது இந்தத் தொகை, தமிழ் சினிமாவில் சாத்தியமாகிறது. அதிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்கள் ஒரு படி மேலே போய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்ட ஆரம்பித்துள்ளன. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முதன்முறையாக 100 கோடி ரூபாய் ஈட்டிய திரைப்படம் சிவாஜி தான். ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம், பம்பர் ஹிட் அடித்தது.

 

இந்த வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த பெரும்பாலும் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் என்பதை சாதாரணமாக கடந்தன. இதேபோல் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், தசாவதாரம் திரைப்படத்தின் மூலம் இந்த அந்தஸ்து கிடைத்தது. கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த அந்த திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவில்லை என்றாலும், வசூலில் அனைவரையும் திருப்திப்படுத்தியது.

 

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் விஜய்க்கு, 100 கோடி ரூபாய் வசூல் அந்தஸ்து கிடைத்தது துப்பாக்கி திரைப்படத்தில் தான். தொடர் தோல்விகளை கொடுத்து வந்த விஜய்க்கு, பெரும் திருப்புமுனையாகவும் இந்த திரைப்படம் அமைந்தது. அஜித் வெங்கட் பிரபு கூட்டணியில் 50வது திரைப்படமாக உருவான மங்காத்தா திரைப்படம், 100 கோடி ரூபாய் சாதனை படைத்தது.

 

இதே போல் ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யா, ஐ திரைப்படத்தின் மூலம் விக்ரம் ஆகியோர் வசூலில் நூறு கோடி ரூபாய் பார்த்தனர். தனுஷிற்கு அசுரன், சிம்புவிற்கு மாநாடு, சிவகார்த்திகேயனுக்கு டாக்டர், கார்த்திக்கு கைதி, ராகவா லாரன்ஸுக்கு காஞ்சனா 2, விஷாலுக்கு மார்க் ஆண்டனி, சுந்தர் சிக்கு அரண்மனை 4 திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் படைத்தன. தற்போது இந்த பட்டியலில் விஜய் சேதுபதியும் சேர்ந்திருக்கிறார். அவரின் மகாராஜா திரைப்படம், நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் நூறு கோடி ரூபாயை தாண்டி வசூல் ஈட்டி வருகிறது.

 

சற்று முன்