நடிகை பாவனி ரெட்டி சீரியல் நடிகையாக தமிழக மக்களுக்கு அறிமுகமானவர். சின்னதம்பி என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். ரெட்டை வால் குருவி என்ற படத்திலும் பாவனி நடித்திருக்கிறார். ராசாத்தி நீலக்குயில் போன்ற டிவி சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் சில படங்களில் பாவனி ரெட்டி நடித்திருக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா வஜ்ரம் ஜூலை காற்றில் துணிவு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இந்தி தெலுங்கு படங்களில் பாவனி ரெட்டி நடித்திருக்கிறார். சினிமா டிவி சீரியல் என நடித்தும் பாவனி ரெட்டி பெரிய அளவில் முன்னணி நடிகையாக வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 2017ம் ஆண்டில் பிரதீப் குமார் என்ற தெலுங்கு நடிகரை பவானி ரெட்டி திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளில் அவர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாவனி ரெட்டி விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் அமீர் என்பவரும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். டான்ஸ் மாஸ்டர் என்று அறிமுகமான அவர், பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனி ரெட்டியை சுற்றி சுற்றி வந்து பிரபோஸ் செய்தார். அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருந்த பிரியங்காவும் காதல் தூது சென்றார். இருவரையும் சேர்த்து வைக்க பலகட்டங்களாக முயற்சி நடந்தது.
முதலில் அமீரை புறக்கணித்து ஒதுக்கிய பாவனி ரெட்டி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அமீருடன் நெருக்கமானார். பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து வந்தனர். காதலர்களாக நெருக்கம் காட்டினர். கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக லிவ் இன் லைப் என தாலி கட்டாமல் பாவனி ரெட்டி அமீருடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், காதலர் தினமான நேற்று ஒரு வீடியோவை இருவரும் வெளியிட்டுள்ளனர். அதில் காதல் மொழி பேசும் இருவரும் 3 ஆண்டுகள் 3 நிமிஷங்களாக போய் விட்டதாகவும் இனி காலம் முழுவதும் ஒன்றாக வாழ வருகிற ஏப்ரல் 20ம் தேதி திருமணம் செய்துக்கொள்வதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளனர். வீடியோ பார்த்த பலரும், 3 வருஷமா புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துட்டு அப்புறம் எதுக்கு புதுசா இப்போ திருமணம், இது செம்ம காமெடியா இருக்கே என கலாய்க்கின்றனர்.





