- Advertisement -
Homeபொழுதுபோக்குபைனல் கண்டஸ்டன்ட் 4 பேரில் யாருக்கு டைட்டில் வின்னர் வாய்ப்பு? கண்டிப்பாக அவருக்குதான் - ஆவலாக...

பைனல் கண்டஸ்டன்ட் 4 பேரில் யாருக்கு டைட்டில் வின்னர் வாய்ப்பு? கண்டிப்பாக அவருக்குதான் – ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி துவங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இப்போது இறுதி வாரத்தை நெருங்கி விட்டது. 100 நாட்களை கடந்த நிலையில் வருகிற 18ம் தேதியன்று நடக்கும் இறுதி போட்டியில் இந்த சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை மேடையில் நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்க இருக்கிறார்.

கடைசியாக வீட்டுக்குள் இருந்த 6 பேரில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கானா வினோத் வெளியேறி விட்டார். இவர்தான் டைட்டில் வின்னர் ஆக தகுதியான போட்டியாளர் என்று பெரும்பாலான மக்கள் கூறி வந்த நிலையில் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்து பணப்பெட்டியுடன் வெளியேறியது இறுதி நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது.

- Advertisement -

இந்த சூழலில் இப்போது சாண்ட்ரா இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே உள்ளதாகவும் உறுதியாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி என்றால் இந்த வீட்டில் அரோரா திவ்யா கணேஷ் சபரிநாதன் மற்றும் விக்கல்ஸ் விக்ரம் என 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிகட்டத்தில் டைட்டில் வின்னர் யார் என்பதை உறுதிபடுத்தும் சூழலில் இருக்கின்றனர்.

டிக்கெட் டூ பினாலே போட்டியில் ஜெயித்த அரோரா முதல் ஆளாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த போட்டியாளர். ஆனால் அரோரா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பல வாரங்கள் குறிப்பாக 50 நாட்களுக்கு பிறகுதான் அவர் பார்வையாளர்களுக்கு வெளியே தெரியவே ஆரம்பித்தார். அதுவரை சக போட்டியாளர் துஷாருடன் நேரத்தை ஜாலியாக போக்கினார் என்று விமர்சனம் உள்ளது.

- Advertisement -

மற்றொரு போட்டியாளர் சபரிநாதன், ஆரம்பத்தில் சில டாஸ்க்குகளில் ஆர்வமாக விளையாடினார். பார்வதியின் ஒரு கண்ணை நொறுக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு பிறகு சபரியின் ஆட்டம் பெரிய அளவில் பிக்பாஸ் வீட்டுக்குள் இல்லை. கார் டாஸ்க் பிரச்னையில் காரை விட்டு இறங்கி ஓடிவந்த சபரி, அந்த நேரத்தில் கம்ருதீன் பார்வதியுடன் கடுமையான வாக்குவாதம் செய்தார்.

அடுத்ததாக விக்கல்ஸ் விக்ரமும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆரம்பத்தில் அவர் மீது இருந்த பெரிய அபிப்ராயம் நாளடைவில் பார்வையாளர்களிடம் குறைந்து போய்விட்டது. இறுதியில் பார்த்தால் திவ்யா கணேஷ் தான் டைட்டில் வின்னராக வர வாய்ப்புள்ளவராக தெரிகிறார். அவர் வைல்டு கார்டு கண்டஸ்ட் ஆக வந்தாலும் கார் டாஸ்க்கின் போது பார்வதியை நேருக்கு நேராக திட்டி சண்டையிட்டவர் அவர்தான். அதனால் அவருக்கு டைட்டில் வின்னர் கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்