- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றி மேல் வெற்றியை குவித்த தி கோட், அட இப்படியும் ஒரு சாதனையா? தயாரிப்பாளருடன் கேக்...

வெற்றி மேல் வெற்றியை குவித்த தி கோட், அட இப்படியும் ஒரு சாதனையா? தயாரிப்பாளருடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஜய் – வைரலாகும் வீடியோ!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. பீஸ்ட், வாரிசு, லியோ, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி படங்களாக இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களாக அமைந்தன.

இப்போது நடிகர் விஜய், தனது 69வது படத்தின் நடித்து வருகிறார். இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். தளபதி 69 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பதாக படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. கேரளம் மாநிலம் பையனூரில் துவங்கிய தளபதி 69 படப்பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக விஜய் பாடிய பாடல் காட்சி படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

நடிகர் விஜயை பொருத்தவரை எந்த படத்தில் நடித்தாலும் அது ரசிகர்களின் அபரிமிதமான வரவேற்பை பெற்ற படங்களாக அமைகின்றன. அதனால் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும், தளபதி 69 படத்துடன் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி அரசியலில் முழுமூச்சாக ஈடுபடுவதாகவும், தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியை வழிநடத்தப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

- Advertisement -

இதற்கிடையே வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடு மிக தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது விஜய் மாநாட்டு பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த மாநாட்டில் விஜய் தனது அரசியல் தனது எதிர்கால திட்டங்கள், அரசியல் கொள்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

இந்த சூழலில் நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் ஷேர் ரூ. 100 கோடியாக சாதனை செய்திருக்கிறது. இதையடுத்து நடிகர் விஜய் மற்றும் தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, கேக் வெட்டி அவர்களுக்குள் ஊட்டி விட்டு கொள்கின்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்