- Advertisement -
Homeபொழுதுபோக்குகேஸ் சிலிண்டர் விலையேற்றம் குறித்து பாஜக அரசை கண்டித்த நடிகர் விஜய் - அவர் நடித்த...

கேஸ் சிலிண்டர் விலையேற்றம் குறித்து பாஜக அரசை கண்டித்த நடிகர் விஜய் – அவர் நடித்த படத்துக்கு டிக்கெட் ப்ரீயா தருவாரா என கேள்வி எழுப்பிய பிரபலம்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் விஜய். அவர் தமிழகத்தை ஆட்சி செய்து வரும் ஆளுங்கட்சி திமுக குறித்தும். மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக அரசு குறித்தும் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார். என்னுடைய கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.

சமீபத்தில் மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலையை ரூ. 50 வரை உயர்த்தி உள்ளது. இது இந்தியா முழுவதும் இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு இது மேலும் கூடுதல் சுமையாக உள்ளது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் தேர்தல் நேரத்தில் கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பது, தேர்தல் முடிந்த பின் கேஸ் சிலிண்டர் விலையை அதிகரிப்பது பாஜக அரசின் வழக்கமாகி விட்டது. மக்கள் மீது அக்கறையில்லாத ஒரு அரசாக உள்ளது என்று அந்த அறிக்கையில் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் மக்களை ஏமாற்றுவதில் வஞ்சிப்பதில் பொய்யான வாக்குறுதிகளை தருவதில் பாஜக அரசும் திமுக அரசும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளை சொல்வதில் திமுகவும் பாஜகவும் எப்போதும் இணைந்த கைகளாக உள்ளன. இதற்கெல்லாம் மக்கள் எதிர்வினை காட்டும் காலம் வரும் என்று அந்த அறிக்கையில் விஜய் கூறியிருந்தார்.

இதற்கு பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தர்ராஜன் பதில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் நடிக்கும் படங்களில் டிக்கெட் விலை என்ன, பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ அல்லது இலவசமாக டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் அவரை தடுத்தார்கள்.

விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும் வசனம் பேசவும் நடனம் ஆடவும் மக்களை ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ அவருக்கு எதுவும் தெரியாது என்று நடிகர் விஜய் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடுமையாக கேள்வி எழுப்பி விமர்சித்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்