- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் அளவுக்கு நான் சீப்பான பெண் அல்ல… விஷால் பட நடிகை போட்டாரே...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் அளவுக்கு நான் சீப்பான பெண் அல்ல… விஷால் பட நடிகை போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வருகிற அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி துவங்க உள்ளது. விஜய் டிவியில் கடந்த 2017 முதல் 2023ம் ஆண்டு வரை நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். கடந்தாண்டில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்த நிலையில், இந்த சீசன் 9ல் அவரே பணியை தொடர்கிறார்.

தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியில் சல்மான்கான் மலையாளத்தில் மோகன்லால் கன்னடத்தில் சுதீப் தெலுங்கில் நாகர்ஜூனா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு எல்லா மொழிகளிலும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது.

- Advertisement -

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வளரும் நடிகர்களாக, கலைஞர்களாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் மக்கள் மத்தியில் தங்களுக்கு நல்ல அடையாளமும் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் நடிகை தனுஸ்ரீ தத்தா என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தனுஸ்ரீ தத்தா. ஆனால் அதன்பிறகு அவர் தமிழில் அதிகமாக நடிக்கவில்லை.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியதாவது, கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களை நான் கடுமையாக திட்டி விடுகிறேன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 1.65 கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

நிலவையே தருவதாக சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கண்டிப்பாக பங்கேற்க மாட்டேன். ஆண்களும் பெண்களும் ஒரே படுக்கையில் படுத்து சண்டை போட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக ஒரு ஆணுடன் ஒரே படுக்கையில் படுக்கும் சீப்பான பெண் நான் அல்ல என்று நடிகை தனுஸ்ரீ தத்தா ஆவேசமாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்