தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வழக்கமாக வில்லன்களை ஹீரோக்கள் பழிவாங்கும் ஆக்சன் படங்களை திரைக்கு வருகின்றன. அதுவும் பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் பல மொழி நடிகர்களை நடிக்க வைத்து ஆக்சன் காட்சிகளை காட்டி படத்தை ஒப்பேத்தி விடுகின்றனர்.
கதை திரைக்கதையில் எந்த புதுமையும் வித்யாசங்களும் இருப்பதில்லை. ஹீரோயிசம் பேசும் படங்களை பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு சலித்து போய் விட்டது. ஒரே மாதிரியான கதைகளில் ஹீரோக்கள் சலிக்காமல் நடித்தாலும் ரசிகர்கள் அலுத்து போகின்றனர். அதனால் தான் டூரிஸ்ட் ஃபேமிலி குடும்பஸ்தன் மாமன் சிறை போன்ற படங்களுக்கு பெரிய வரவேற்பு ஆதரவு கிடைக்கிறது.
இந்த சூழலில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. பல கோடி ரூபாய் வசூலும் குவிகிறது. அதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மாஸ் ஹிட் படங்கள் மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல ஹிட் படங்கள் புதுப்பொலிவுடன் திரைக்கு வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் வசூலை குவித்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த 50வது படம் இது. இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகி 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. அதை தொடர்ந்து இப்போது அஜீத்குமார் நடித்த மற்றொரு படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த படமும் பெரிய வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் துணிவு. இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் அஜீத்குமாருடன் மஞ்சு வாரியர் தர்ஷன் சமுத்திரக்கனி என பலர் நடித்திருந்தனர். கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு படம் உலக அளவில் 210 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
அதனால் துணிவு படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்தாண்டில் குட் பேட் அக்லி படத்துக்கு அஜீத்குமாரின் மங்காத்தா படம் மட்டுமே ரி ரிலீஸ் ஆனது, இப்போது துணிவு படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையே துணிவு படத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இந்த படத்துக்கு முன்பதிவு நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.





