- Advertisement -
Homeபொழுதுபோக்கு“தளபதி 68” புராஜெக்ட்டிற்க்குள் தமன் வந்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? யுவன் ஷங்கர் ராஜாவே...

“தளபதி 68” புராஜெக்ட்டிற்க்குள் தமன் வந்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? யுவன் ஷங்கர் ராஜாவே இப்படி பண்ணா எப்படி?

- Advertisement -

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்க்கிறார் என்ற செய்திதான் சமீப நாட்களாக டாக் ஆஃப் தி கோலிவுட்டாக இருக்கிறது. அதே போல் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதுதான் இத்திரைப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

“தளபதி 68” திரைப்படத்தில் விஜய், தந்தை-மகன் ஆகிய இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். குறிப்பாக வயதான தந்தையாக நடிக்கிறாராம். இந்த வயதான விஜய் கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்த படக்குழுவினர் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் உதவியை நாட உள்ளார்களாம்.

- Advertisement -

அதாவது படக்குழுவினர் விஜய்யை அழைத்துக்கொண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Institute of creative technology என்ற மையத்திற்குச் சென்றுள்ளனராம். அங்கே விஜய்யின் உடலை ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேன் செய்யப்பட்ட விஜய்யின் உருவத்தை வைத்து வயதான கதாபாத்திரத்தில் எவ்வாறு தத்ரூபமாக காட்சிப்படுத்தலாம் என கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் திட்டமிட்டு வருகிறார்களாம்.

“தளபதி 68” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமன், தான் இப்போது ஒரு மிகப் பெரிய பிராஜெக்ட்டில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றப்போவதாக கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் “தளபதி 68” திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து தமன் இசையமைக்க உள்ளது ஓரளவு உறுதியான ஒன்றே என்று கூறப்படுகிறது. தமன் எவ்வாறு இந்த புராஜெக்ட்டிற்குள் வந்தார் என்பது குறித்த தகவல் ஒன்றை வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது யுவன் ஷங்கர் ராஜா மிக விரைவிலேயே ஒரு திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துவிடுவாராம், ஆனால் Background Score பணிகளை இழுத்தடித்து விடுவாராம். இந்த பிரச்சனையால் “தளபதி 68” திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகிவிடக் கூடாது என்பதற்காகவே தமனை இந்த புராஜெக்ட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனராம். அதாவது இத்திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பை தமன் பார்த்துக்கொள்வார் என கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்