- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தின் தயாரிப்பாளர் தளபதி 69 படத்தை ரூ. 100 கொடுத்து வாங்க காரணம்? வைரலாகி...

லியோ படத்தின் தயாரிப்பாளர் தளபதி 69 படத்தை ரூ. 100 கொடுத்து வாங்க காரணம்? வைரலாகி வரும் இரண்டு விஷயங்கள் – இதுல எது உண்மைன்னு தெரியலையே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான படம் லியோ. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் 585 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்ததாக கூறப்பட்டது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றதாக கூறப்பட்ட லியோ படம், ரசிகர்களை பொருத்த வரை மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்த படமாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக லியோ படத்தின் 2ம் பாகத்தில் வரும் இரட்டைப் பிறவி, ஜாதகம், நரபலி உள்ளிட்ட மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் ரசிகர்களை கொட்டாவி விட வைத்தது.

- Advertisement -

மாநகரம், கைதி, விக்ரம் போன்ற மாஸ் ஹிட் படங்களை தந்த லோகேஷ் கனகராஜ் இப்படியும் ஒரு சொதப்பலான கதையை இயக்குவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டது. அதிலும் கிளைமேக்ஸில் 300 பேரை விஜய் அடித்து வீழ்த்துவது எல்லாம் விஜய் ரசிகர்களுக்கே ஒரு கட்டத்தில் சிரிப்பை வரவழைத்தது.

லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் அதன் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தான் தயாரித்து இருந்தார். இவர் நடிகர் விஜயின் மிக நெருங்கிய நண்பர் என்று அப்போதே கூறப்பட்டது. லியோ படத்தின் உண்மையான தயாரிப்பாளர் விஜய்தான். தன் நண்பர் லலித்குமார் பெயரில் தயாரிக்கிறார் என்றும் ஒரு தகவல் பரவியது.

- Advertisement -

இப்போது விஜய் தளபதி 69 என்ற தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் வெளியீடு செய்யும் உரிமையை, படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்திடம் இருந்து, தயாரிப்பாளர் லலித்குமார் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

இது, நடிகர் விஜயே தனது நண்பர் லலித்குமார் மூலமாக ரூ. 100 கோடி கொடுத்து லலித் பெயரில் உரிமம் வாங்கியிருக்கலாம் எ்ன்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது. அதே நேரத்தில் லியோ படத்தை தயாரித்த வகையில், லலித்குமாருக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதால் அதை ஈடுகட்டவே, தளபதி 69 படத்தை ரூ. 100 கோடி கொடுத்து தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையை வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது உண்மை என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்