- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதியின் 70 ஆவது திரைப்படத்தை குறித்து கிளம்பிய வதந்தி, முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிக்கையாளர்

தளபதியின் 70 ஆவது திரைப்படத்தை குறித்து கிளம்பிய வதந்தி, முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிக்கையாளர்

- Advertisement -

விஜய்யின் “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவர உள்ளது. லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து உருவாகி வரும் இத்திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதும், இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதும் பலரும் அறிந்ததே. இத்திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சமீப நாட்களாக இணையத்தில்  விஜய்யின் 70 ஆவது திரைப்படத்தை குறித்த ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது விஜய்யின் 70 ஆவது திரைப்படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார் என்ற தகவலே அது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தகவலை மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது விஜய்யின் 70 ஆவது திரைப்படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாக வெளிவரும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்று கூறியுள்ளார். மேலும் ஷங்கர் “இந்தியன் 2” திரைப்படத்தை தொடர்ந்து “வேள்பாரி” நாவலை திரைப்படமாக எடுக்க ஆர்வம் கொண்டிருக்கிறார் எனவும் அது அவரது கனவு புராஜெக்ட் எனவும் கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த “நண்பன்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஷங்கர் விஜய்யின் 70 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவிய நிலையில் தற்போது இந்த தகவல் வதந்தி என்று தெரிய வந்துள்ளது.

சற்று முன்