- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ ரன்னிங் டைம் தெரிஞ்சு போச்சு... படத்த பாத்துட்டு தளபதி என்ன சொன்னாருனு நீங்களே பாருங்க...

லியோ ரன்னிங் டைம் தெரிஞ்சு போச்சு… படத்த பாத்துட்டு தளபதி என்ன சொன்னாருனு நீங்களே பாருங்க…

- Advertisement -

வரும் மாதங்களில் வெளியாக இருக்கும் திரைப்படங்களில், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது லியோ தான். தளபதி விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தனது முந்தைய படங்களில் ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்த இயக்குனர், இதிலும் அதனை செய்து காட்டியிருப்பார் என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல், லோகேஷ் கனகராஜின் எல் சி யு கான்செப்ட்டும் ரசிகர்களை கவர்ந்திருப்பதால், லியோ மீதான கவனம் அதிகரித்துள்ளது.

- Advertisement -

படத்தில் விஜயுடன் சஞ்சய்தத், அர்ஜுன், திரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், நடன இயக்குனர் சாண்டி என ஏராளமானோர் நடித்துள்ளனர். இதில் ஒவ்வொருவருக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை லோகேஷ் கனகராஜ் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் லியோ திரைப்படம், லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸில்தான் இருக்கும் என்றும், இதில் விக்ரம் படத்தில் நடித்த சில கதாபாத்திரங்கள் வருவதாகவும் கூறப்படுகிறது. படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் 30-ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில், அன்றைய தினமே டீசர் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதனிடையே லியோ படத்தின் அப்டேட்டுகளை நாள்தோறும் வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் போஸ்டர்கள் வெளியாகின. ஒவ்வொரு போஸ்டரும் விதவிதமாக இருக்க, அதில் இடம்பெற்ற வசனங்களும் பலரை கவனிக்க வைத்தன. அமைதியாக போரை தவிருங்கள், அமைதியாக சதி திட்டத்திலிருந்து தப்பியுங்கள், அமைதியாக போருக்கு தயாராகுங்கள் போன்ற டயலாக்குகள் அதில் இடம்பெற்றதால் விஜய் ரசிகர்கள் குஷி ஆகினர்.

இந்த நிலையில் புது தகவலாக லியோ திரைப்படம் இரண்டு மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. வெளிநாடுகளில் தான் இதற்கான டைமிங் என்றும், இந்தியாவில் மாறுபடலாம் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த வாரம் சென்னையில் லியோ திரைப்படத்தை விஜய் பார்த்திருக்கிறார். படம் அருமையாக வந்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்த விஜய், படக்குழுவினரை பாராட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்