- Advertisement -
Homeபொழுதுபோக்குதென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்காக அள்ளிக் கொடுத்த தளபதி விஜய்... கமல்ஹாசனை தொடர்ந்து பணத்தை வழங்கிய...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்காக அள்ளிக் கொடுத்த தளபதி விஜய்… கமல்ஹாசனை தொடர்ந்து பணத்தை வழங்கிய நடிகர்…

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாகவே நடிகர்கள் கூறி வருகின்றனர். நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். முதலாவதாக சங்கம் பாக்கி வைத்திருந்த கடன்களை அவர் அடைந்தார்.

இதற்காக மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு நடிகர் சங்கத்தை திறம்பட நடத்தினார். அவர் இருந்த வரைக்கும் நடிகர் சங்கம் பொற்காலமாக இருந்ததாக பலரும் கூறினர்.

- Advertisement -

இதன்பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் வேண்டும் என கூறிவரும் நிலையில் அதற்கான பணிகள் முடங்கியே உள்ளன. நடிகர் சங்க கட்டடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்வேன் என்று விஷால் வெளிப்படையாக பேசியிருந்தார். இப்படி பலர் கூறி வந்தாலும், கட்டடம் கட்டுவதற்கான பணிகள் மட்டும் வளரவே இல்லை.

தியாகராய நகரில் அதற்கான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அதற்கு நிதி திரட்டுவதற்கான வேலையில் நடிகர் சங்கம் இறங்கி உள்ளது. தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், மேலும் நிர்வாகிகளான கார்த்தி விஷால் உள்ளிட்டோர் நடிகர் சங்க கட்டடத்திற்கு பணம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

- Advertisement -

இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இதேபோல், சூர்யா கார்த்தி ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கினர். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனும் நடிகர் சங்க கட்டடத்திற்காக ஒரு கோடி ரூபாய் அளித்தார்.

இதற்கான அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இப்படியான சூழலில் தற்போது நடிகர் சங்க கட்டடத்திற்காக விஜய்யும் பண உதவி அளித்திருக்கிறார். இதற்காக மட்டும் அவர் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாக பலரும் விஜயை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்