விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டில் பிக்பாஸ் சீசன் 10 ஆக தொடங்கியுள்ளது. 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி நடத்திய நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். 3வது ஆண்டாக இந்த முறையும் விஜய் சேதுபதியே பணியை தொடர்கிறார்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவக்க நாளில் மேடையில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்படுவார்கள். இதுதான் கடந்த 9 ஆண்டுகளாக வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால் இந்த முறை அதிலும் பிக்பாஸ் அதிரடி மாற்றம் செய்திருந்தார்.
பிக்பாஸ் சீசன் 10 தொடக்க நிகழ்ச்சியில் முன் எப்போதும் இல்லாத வகையில் 29 போட்டியாளர்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் நேரடியாக மேடையில் தங்களைப் பற்றிய அறிமுகத்தை ரசிகர்களின் முன்னால் வழங்கினார்கள். இதற்காக அவர்களுக்கு 60 விநாடிகள் கால அவகாமும் தரப்பட்டது.
முற்றிலும் புதிய முயற்சியாக போட்டியாளர்களின் அறிமுகத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து நேரலையில் பங்கேற்ற பார்வையாளர்கள் அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதா, வேண்டாமா என்பதை தீர்மானித்தனர். இதன் விளைவாக தொடக்க நாளிலேயே பிக்பாஸ் அறிமுக மேடையிலேயே 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லாமல் வெளியேற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பார்வையாளர்களாக இருந்த பிக்பாஸ் ரசிகர்கள் அளித்த ஓட்டுக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 19 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று தங்களது வருகையை உறுதி செய்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த முறை சென்ற 19 போட்டியாளர்கள், அன்சார் முகேஷ் தான்யா ராகவ் குமரன் சாந்தினி தமிழரசன் சவின்யா வினோத் பாண்டியன் அவினாஷ் முத்தழகி அஸ்வினி பிரித்விநாத் ஜாவேத் லட்சுமி பிரியா மற்றும் ஷாதிகா.
இவர்களுடன் பிக்பாஸ் தி காமன் மேன் என்ற மாநில அளவிலான போட்டியின் மூலமாக தேர்வான ஜேசன் முனியம்மா மற்றும் ஷாமா ஆகிய 3 பேரும் இந்த போட்டியில் இணைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில்16 பிரபலங்களுடன் சாதாரணமான பிரபலம் இல்லாத 3 பேரும் இணைந்து போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். 19 போட்டியாளர்களில் சிலர் மட்டுமே பரிச்சயமான முகங்களாக உள்ளன.





