நடிகர் விஷால் இப்போது ரத்னம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் ஹரி இயக்கி இருக்கிறார். டைரக்டர் ஹரி ஏற்கனவே கோவில், வேல், ஐயா, சிங்கம், பூஜை, தாமிரபரணி, சாமி போன்ற பல வெற்றி படங்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியின் படங்கள் என்றாலே பரபரப்பாகவும், குடும்ப செண்டிமெண்டாகவும், காமெடியாகவும், காதல் கதையாகவும் பல விதங்களில் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.
இந்நிலையில் ரத்னம் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ரத்னம் படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை நாளை ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் இந்த படம் வெளியாகாது என்று அந்த மாவட்டங்களைச் சேர்ந்த திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விஷாலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்திலும், விஷால் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பதிலளித்து நடிகர் விஷால் பரபரப்பான ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு கடிதம் அனுப்பி உள்ள நபர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறாரா என்பது கூட எனக்கு தெரியாது. வினியோகிஸ்தம் செய்த வகையில் பணம் தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு, பணத்தை தராவிட்டால் திருச்சி, தஞ்சாவூர்மாவட்ட தியேட்டர்களில் ரத்னம் படம் திரைிட விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.
எனக்கும் அவருக்கும் எந்த விதமான கொடுக்கல் வாங்கல் பிரச்சனையும் இல்லை. அவருக்கு நான் பணம் தர வேண்டிய எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லை என்பது தான் உண்மை. இது தேவையில்லாமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இவ்வளவு படங்களில் நடித்த நடிகர் விஷாலுக்கு இந்த நிலைமை என்றால் புதுமுக நடிகரோ அல்லது புது தயாரிப்பாளரோ இப்படி இது போன்ற கட்டப்பஞ்சாயத்து சிக்கினால் அவர்கள் நிலை என்ன என்றுதான் எனக்கு கவலையாக இருக்கிறது.
என் மீது எந்தவித காரணமும் இல்லாமல் என் படத்தை திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெளியாக விடாமல் தடுக்க பார்க்கிறார்கள். நான் யாருக்கும், எதற்காகவும் பணம் தர வேண்டிய அவசியம் இல்லை, அதற்கான காரணமும் இல்லை. என்னை சுத்தலில் விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த விஷயம் குறித்து நான் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான முயற்சிகளில் நான் இறங்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று, ஆவேசமாக அந்த ஆடியோவில் விஷால் பேசியிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திஎள்ளது.





