- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் விடாமுயற்சியில் இறங்கிய தி கோட் படக்குழு, இந்த முறை அது சாத்தியம்தானா? - எதிர்பார்ப்பில்...

மீண்டும் விடாமுயற்சியில் இறங்கிய தி கோட் படக்குழு, இந்த முறை அது சாத்தியம்தானா? – எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்‌ஷன் செய்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வந்த நிலையில், அவையும் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. தொழில்நுட்ப பணிகள் அதிகம் இருப்பதால் படம் ரிலீஸ் தாமதாகும் என கூறப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதியில், கண்டிப்பாக தி கோட் ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகாலை 4 மணி, காலை 7 மணி சிறப்பு காட்சிகளும், அதை் தொடர்ந்து வழக்கமான காட்சிகள் என புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது படங்களை திரையிட தமிழக அரசு அனுமதித்தது. ஆனால் அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகளால் சில அசம்பாவித சம்பவங்களும், போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டதால் தமிழக அரசு அதற்கு தடை விதித்தது.

இப்போது புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் நாளில் காலை 9 மணி காட்சிக்கு மட்டுமே அனுமதி தரும் தமிழக அரசு, அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகளை அனுமதிப்பது இல்லை. தவிர, 9 மணி காட்சி துவங்கி, இரவு 2 மணிக்குள் 5 சிறப்பு காட்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் தியேட்டர் நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி தருவதால் அங்கு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ்நாட்டில் படம் பார்க்கும் முன்பே கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து அங்குள்ள ரசிகர்கள் படம் பார்த்து ரிவ்யூ தர ஆரம்பித்து விடுகின்றனர்.

ஜெயிலர், லியோ, தங்கலான் என பல பெரிய படங்களுக்கு காலை 9 மணி காட்சிக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதித்து வரும் நிலையில், தி கோட் படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருப்பதால் அதிகாலை 4 மணி, காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கேட்டுள்ளது. ஆனால் அரசு அனுமதி தராத பட்சத்தில் வழக்கமாக காலை 9 மணி காட்சிதான் தி கோட் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்